ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ஜனவரி 11ல் நேருக்கு நேர் மோதும் அஜித் - விஜய்!

வாரிசு ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ஜனவரி 11ல் நேருக்கு நேர் மோதும் அஜித் - விஜய்!

விஜய்

விஜய்

Varisu : வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன்.

வாரிசு திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் ரிலீஸ் தேதியில் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை நேற்று படக்குழு வெளியிட்டது. காதல், காமெடி, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என்று அனைத்தும் கலந்த ஒரு கமர்ஷியல் படமாக வாரிசு இருக்கும் என்று தயாரிப்பாளர் முன்னதாக ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியது போலவே ட்ரெய்லரும் இருந்தது. கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் படக்குழு நேற்று இரவு அறிவித்தது.

அதன்படி வாரிசு படம் வரும் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே துணிவு திரைப்படமும் 11ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் வரும் பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு சிறந்த பொங்கலாக இருக்குமென கூறப்படுகிறது

First published:

Tags: Actor Vijay, Varisu