தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் விஜய் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பல நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டின் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். மகன் பெயரை சொல்ல விரும்பாத அப்பா. அப்பா பெயரை தன் பெயருடன் சேர்த்துகொள்ள விரும்பாத மகன். இவர்கள் இருவருக்குள் இருக்கும் ஈகோவுடன் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை வாரிசு படத்தில் சொல்ல முயற்சித்துள்ளனர். சென்னையில் மிகப்பெரிய தொழிலதிபர் சரத்குமார். அவருக்கு மூன்று மகன்கள். ஆனால் இளையமகன் விஜய் ராஜேந்தர் தன்னுடைய தந்தையின் எண்ணத்திற்கு மாறாக செயல்படுகிறார். அதேபோல் அப்பவின் சொல்லுக்கு கடுப்பட்டு தொழிலை ஸ்ரீகாந்த், ஷாம் செயல்படுகிறார்கள். அத்துடன் தந்தையின் அடுத்த வாரிசாக நினைக்கிறார்கள். மேலும் விஜய் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். அதன் பின் 7 வருடங்களாக தன்னுடைய அடையாளதை உருவாக்கவும் முயற்சிக்கிறார். அந்த சமயத்தில் அவர் மீண்டும் தன்னுடைய அப்பா வீட்டிற்கு வருகிறார். அங்கு ஏகப்பட்ட குழப்பங்கள், போட்டி, பிரிவு என அனைத்தும் நடைபெறுகிறது. அதை அனைத்தையும் எப்படி சமாளிக்கிறார்? குடும்பத்தை மீட்டாரா? தந்தையுடன் இணைய காரணம் என்ன? என்பதுதான் வாரிசு.
துப்பாக்கி படத்திற்கு பிறகு நடிகர் விஜய், செண்டிமெண்ட் படங்களை தவிர்த்து வந்தார். அதில் இருந்து சற்று விலகி முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களுக்காக இந்தப் படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் விஜய். வாரிசு படத்தில் விஜய் தனக்கே உரிய துள்ளலுடன் நடித்து அசத்தியுள்ளார். குறிப்பாக எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் நடித்துள்ளார் விஜய். அதுவும் காமெடி நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி போல் ஒரு காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் கைதட்டல்கள் கிடைக்கின்றன. இது போன்ற 6 சீன்களில் ஸ்கோர் செய்து அசத்துகிறார். அது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கும்.
இதில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன. அது படத்திற்கு பெரிய மைனஸ். விஜய் தன்னுடைய வீட்டிற்கு வந்த பிறகு இதுதான் நடக்க போகிறது என்பதை படம் பார்க்கும் ரசிகர்கள் மிக எளிதாக கணிக்க முடிகிறது. இந்தப் படத்தில் யோகிபாபு மற்றும் விஜய் ஆகியோர் இணைந்து சில இடங்களில் சிரிக்க வைக்கின்றனர். சில காட்சிகள் விஜயின் முந்தை வெற்றி படங்களின் மேனரிசங்களையும், காட்சிகளையும் இணைத்துள்ளனர். திரையில் நடக்கும் சம்பவங்கள், திரையரங்கில் இருக்கும் ரசிகர்களிடம் ஏதாவது ஒரு விஷயத்தில் கனெகட் செய்ய வேண்டும். ஆனால் அங்கு ஏதோ நடக்கிறது, அதை நாம் பார்த்துகொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை சில இடங்களில் கொடுத்துவிடுகிறது. அத்துடன் படத்தின் கதைகளம் மிகபெரிய பணக்காரரின் வீடு என்பதால், அது எளிய ரசிகனுக்கு ஒரு அந்நிய எண்ணத்தை கொடுக்கலாம்.
தமன் பின்னணி இசை படத்திற்கு பெரிதாக உதவவில்லை. ரஞ்சிதமே பாடல் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் வைக்க வேண்டுமே என்று திணித்ததுபோல் உள்ளது. குறிப்பாக ரஞ்சிதமே பாடலுக்கு முந்தைய காட்சியும், அடுத்த காட்சியும் சோகமாக உள்ளது. ஆனால் பாடலுக்கு மட்டும் அதுவரை வராத ஹீரோயின் விஜய்யுடன் நடனமாடுகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கான காட்சிகள் மிக மிக குறைவு. வழக்கமான விஜய் படங்கள் போல நடனமாட மட்டுமே நாயகியாக வருகிறார். இதில் வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வில்லனுக்கும் நாயகனுக்குமான போட்டியே இல்லை. அதனால் படத்தில் சுவாரஸ்யம் குறைகிறது. மேலும் படத்தில் ஏகப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன. ஆனால் அவை முழுமைபெறவில்லை. அவசரத்தில் உருவாக்கியதுபோன்ற உணர்வை கொடுக்கிறது.
குடும்ப ரசிகர்களுக்காக அம்மா - மகன், அப்பா - மகன், அண்ணன் - தம்பி என செண்டிமெண்டை நம்பி முழுக்க முழுக்க எடுக்கப்பட்டுள்ள வாரிசு படம் பாஸ் மார்க் வாங்க முயற்சிக்கிறது. மோசம் என்று சொல்வதற்கு இல்லை. ஆகா என்று பாராட்டுவதற்கும் இல்லை. ஆட்டநாகனாக இருக்க வேண்டிய விஜய், Century-ஐ மிஸ் செய்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Varisu