• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஷாலுக்கு திருமணம்... திடீர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலட்சுமி

விஷாலுக்கு திருமணம்... திடீர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலட்சுமி

நடிகை வரலட்சுமி சரத்குமார்

நடிகை வரலட்சுமி சரத்குமார்

தனது திருமணம் குறித்து பரவிய தகவலுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கமளித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தனது திருமணம் குறித்து பரவிய தகவலுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கமளித்துள்ளார்.

நடிகரும் இயக்குநருமான அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் விஷால்.  திடீரென ‘செல்லமே’ என்ற படத்தின் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்த அவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்தார்.

தயாரிப்பாளராகவும் மாறி 'துப்பறிவாளன்', 'பாண்டியநாடு', 'ஆம்பள' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திருமணம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போது, “நடிகர் சங்கத்தின் கட்டடப் பணிகள் முடிந்து, அதில் தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறியிருந்தார். இடையில் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்து பின்னர் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விரைவில் அரசியலுக்கு வருவேன் என்றும் கூறி வந்தார். நடிகை வரலட்சுமியுடன் காதல் என்றும் அவரைச் சுற்றி கிசுகிசுக்கள் வெளிவந்தன.



இந்த நிலையில் தற்போது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு விஷால் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், "அவ்வப்போது எனது திருமணம் குறித்து வதந்திகள் கிளம்புவது போலவே தற்போது வருட இறுதியில் மீண்டும் எனது திருமணம் குறித்து வதந்தி கிளம்பியுள்ளது. நான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்க போவதாகவும் பரவி வரும் அந்த தகவல் வதந்தி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. நான் எனது வேலையில் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.



ஹெச்.ஐ.வி ரத்த விவகாரம்: சிறு குறையை அரசியலாக்கக் கூடாது - வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: