• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நாயை மகன் என்று அறிமுகப்படுத்திய வரலட்சுமி - 'ஷாக்'கான ரசிகர்கள்

நாயை மகன் என்று அறிமுகப்படுத்திய வரலட்சுமி - 'ஷாக்'கான ரசிகர்கள்

தனது நாயுடன் வரலட்சுமி

தனது நாயுடன் வரலட்சுமி

தனது நாய்க்கு Gucci என்று பெயர் வைத்திருக்கும் வரலட்சுமி, அதனை பின்தொடர Guccivaralaxmi என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்டும் தொடங்கியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகைகளுக்கும் நாய்க்கும் உள்ள அள்பும், உறவும் நாடறிந்தது. மனிதர்களின் நாய்ப்பாசம் நடிகைகளால் ஊக்கம் பெற்றது எனலாம். தெருநாய்களுக்காக த்ரிஷா பலமுறை குரல் கொடுத்துள்ளார். வீடற்ற தெருநாய்களுக்கு காப்பகம் அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் கடிதம்கூட அனுப்பியிருக்கிறார். 

நடிகை வரலட்சுமி ஒருபடி மேலே சென்று தனது நாயை, தனது மகன் என்று நேற்று ட்விட்டரில் அறிமுகப்படுத்தினார்



தமிழில் போடா போடி மூலம் அறிமுகமான வரலட்சுமி, நாயகி வேடங்களை தவிர்த்து வில்லி, குணச்சித்திரம் என இறங்கிய பிறகு அதிக வாய்ப்புகள் வந்தன. அதனைத் தொடர்ந்து கதாநாயகி மையப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இந்த வருடம் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் மொத்தம் 10 படங்கள் அவரது நடிப்பில் தயாராகிறது. இதில் சில வெளிவந்துள்ளன. மற்றவை விரைவில் ஓடிடியிலும், திரையரங்குகளிலும் வெளியாக உள்ளன.

Also read... தமிழர் பிரச்சனை குறித்து பேசக்கூடாது - சமந்தா மௌனத்தின் பின்னணி!

தற்போது ஊரடங்கால் வீட்டிலிருக்கும் வரலட்சுமி, எனது மகன் என்று தனது வளர்ப்பு நாயை அறிமுகப்படுத்தினார். நாய்ப்பாசம் அனைவருக்கும் உண்டு. ஆனால், நாயை தனது மகன் என்று உரிமையளிக்கும் வரலட்சுமியின் நாய்ப்பாசம் கண்டு ரசிகர்கள் ஷாக்காகிப் போயினர். தனது நாய்க்கு Gucci என்று பெயர் வைத்திருப்பவர், அதனை பின்தொடர Guccivaralaxmi என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்டும் தொடங்கியுள்ளார். பொதுவாக நாய்தான் மனிதர்களை பின் தொடரும், இந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் மனிதர்கள் வரலட்சுமியின் நாயை ஸாரி, மகனை பின்தொடராலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: