முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஸ்டண்ட் மேனை பந்தாடிய வரலட்சுமி... புகழ்ந்து தள்ளிய சரத்குமார்!

ஸ்டண்ட் மேனை பந்தாடிய வரலட்சுமி... புகழ்ந்து தள்ளிய சரத்குமார்!

வரலட்சுமி

வரலட்சுமி

‘சேஷிங்’ படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிக்காக நடிகை வரலட்சுமி டூப் போடாமல் நடித்துள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகை வரலட்சுமியின் சண்டைக் காட்சிகளை பார்த்து புகழ்ந்துள்ளார் அவரின் தந்தை நடிகை சரத்குமார்

வீரா இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்து வரும் படம் ‘சேஷிங்’. இந்தப் படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிக்காக நடிகை வரலட்சுமி டூப் போடாமல் நடித்துள்ளார். இந்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில். ‘சண்டை காட்சிகளில் நானே நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. தயவு செய்து இதை வீட்டில் செய்து பார்க்காதீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

வரலட்சுமியில் இந்த வீடியோவை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் வரலட்சுமியில் தந்தை நடிகர் சரத்குமார் இந்த வீடியோவை பகிர்ந்து, ‘ உன்னை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. தைரியமாக இருக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு வரலட்சுமி, ‘நன்றி அப்பா. நான் இதை சிறப்பான ஒருவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அது நீங்கள் தான். லவ் யூ’ என்று பதிலளித்துள்ளார்.

First published:

Tags: Varalakshmi sarathkumar