முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வரலட்சுமி கையில் முகமூடி டாட்டூ... சொல்லும் செய்தி என்ன?

வரலட்சுமி கையில் முகமூடி டாட்டூ... சொல்லும் செய்தி என்ன?

வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார்

எந்த முகமூடியும் இல்லாமல், நமக்கான அமைதியான வாழ்க்கையை வாழ்வோம் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகை வரலட்சுமி சரத்குமார் சினிமா மீதான தனது காதலை கூறும் வகையில் தனது கையில் முகமூடியை டாட்டூவாக போட்டுள்ளார்.

விஜய்யின் சர்கார், தனுஷின் மாரி 2 என கடந்த ஆண்டில் அசத்திய நடிகை வரலட்சுமி, இந்த ஆண்டு பல படங்களில் நடித்து வருகிறார்.

வெல்வெட் நகரம், கன்னி ராசி, நீயா 2, டேனி ஆகிய படங்கள் வரலட்சுமி நடிப்பில்  ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில், தற்போது வரலட்சுமி 'ராஜபார்வை' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது கையில் முகமூடியை டாட்டூவாக போட்டுள்ளார். அது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘சினிமா மீதான எனது காதலுக்கும், எல்லா பெண்களுக்கும் ஆதரவாகத்தான் இந்த டாட்டூ. நாம் அனைவரும் முகமூடியை அணிந்துள்ளோம். நமது வாழ்க்கை மற்றவர்களுக்காக பொய்கள் நிறைந்ததாக இருக்கிறது. எந்த முகமூடியும் இல்லாமல், நமக்கான அமைதியான வாழ்க்கையை வாழ்வோம். நம்மை நாமே நேசிக்க கற்றுக்கொள்வோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Also watch

First published:

Tags: Varalakshmi sarathkumar