• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஹீரோயினை மையமாக கொண்ட படத்தில் நடிக்க இருக்கும் வனிதா விஜயகுமார்!

ஹீரோயினை மையமாக கொண்ட படத்தில் நடிக்க இருக்கும் வனிதா விஜயகுமார்!

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். லாக்டவுன் நேரத்தில் வனிதா யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார்.

  • Share this:
விஜய்யின் சந்திரலேகா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கோலிவுட்டில் பெரிதாக பிரபலமாகவில்லை. பின்னர் அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தற்போது அவரது மகள்களுடன் வனிதா வசித்து வருகிறார். இதனிடையே பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். லாக்டவுன் நேரத்தில் வனிதா யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். அந்த சேனலை தொடங்க உதவி செய்த பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார் வனிதா. பீட்டர் பால் ஏற்கனவே திருமணமானவர் என்றாலும் வனிதா மகிழ்ச்சியாக திருமணம் செய்துகொண்டார். பின்னர் வனிதா தன் 40வது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் கோவாவுக்கு சென்றார்.

பீட்டர் பாலுடன் நடிகை வனிதா திருமணம்


அங்கு பீட்டர் பால் மது குடித்ததால் பிரச்னை ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்துவிட்டனர். பீட்டர் பாலை நம்பி ஏமாந்துவிட்டதாகக் கூறி தன் யூடியூப் சேனலில் கண்ணீர் வீடியோ வெளியிட்டார் வனிதா. பின்னர் தனது குழந்தைகளை கவனித்து கொண்டும், பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே குடும்பத்துடன் மாலத்தீவு சென்ற வனிதா, புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவரை தேடி பட வாய்ப்பு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

பாம்பு சட்டை படம் இயக்கிய ஆதம் தாசன், ஹீரோயினை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கிறார். அனல் காற்று என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் வனிதா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கும் படம் என்பதால் தனது கதாபாத்திரத்தை வலுவாக நிலைநிறுத்த விரும்பி இந்த படத்தில் நடிக்க வனிதா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: