மாலத்தீவிலிருந்து அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிடும் வனிதா விஜயக்குமார்

வனிதா விஜயக்குமார்

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் மற்றும் நடிகையான வனிதா விஜயக்குமார் மாலத்தீவிலிருந்து வரிசையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 • Share this:
  நடிகை வனிதா தமிழ் திரைப்படங்கள் சில வற்றில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்ற வனிதா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தனது திறமைகளை வெளிகாட்டி வந்தார்.

  இதையடுத்து கடந்த வருடம் ஜூன் மாதம் 27 ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.இருவரின் திருமணத்திற்கு பிறகு பெரும் சர்ச்சை உருவெடுத்ததை நாம் அனைவரும் அறிவோம்.ஆனால் எதிர்பாராத நேரத்தில் பீட்டர் பாலை விட்டு பிரிவதாக வனிதா விஜயக்குமார் அக்டோபர் மாதம் அறிவித்தார்.

  மேலும் ‘ ஒரு உருக்கமான வீடியோ ஒன்றையும் பேசி வெளியிட்டிருந்தார்.அதில்‘ஏமாந்துட்டேன்,தோற்றுவிட்டேன்.காதல், திருமணம் எனக்கு அமையவில்லை” என கண்ணீர் மல்க பேசியிருந்தார்.அதற்கு பிறகு வனிதா தன் கையில் டாட்டூ குத்தியிருந்த பீட்டர் பால் என்ற பெயரை வேறு ஒன்றாக மாற்றியதையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

  இந்நிலையில் தற்போது மாலத்தீவு சென்றுள்ள வனிதா அங்கிருந்து வரிசையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  அந்த புகைப்படத்தில் post covid travel, 2021, maldives ஆகிய ஹேஸ்டேக்குகளை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார்.  மேலும் மாலத்தீவிலிருந்து தனது ரசிகர்களுடன் லைவ் மூலம் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

   
  Published by:Tamilmalar Natarajan
  First published: