Vanitha Vijaykumar: சாரி சுரேஷ் தாத்தா... பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து திடிரென வெளியேறிய வனிதா!

வனிதா விஜயகுமார்

விஜய் தொலைக்காட்சியோடு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்ற போதும், பணியிடத்தில் நிகழும் மோசமான தாக்குதல்களையும், நெறியற்ற நடவடிக்கைகளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வனிதா தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ’பணியிடங்களில் பெண்களை மோசமாக நடத்துவது ஆண்கள் மட்டுமல்ல; பொறாமை பிடித்த பெண்களும் அப்படியே நடந்துகொள்கிறார்கள்’ என்று செய்திக் குறிப்பு வெளியிட்டு, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் வனிதா விஜயகுமார்.

    விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றி வரும் நடிகை வனிதா விஜயகுமார், பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் ஆகிய நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். இதில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் அவர் தற்போது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் வனிதா விஜயகுமார். ‘என்னை அவமானப்படுத்துவது, கொடுமைப்படுத்துவது முதலானவற்றை நான் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறேன். எனது குடும்பமாகவே இருந்தாலும் அதனை எதிர்கொள்வேன் என்பதை உலகமே அறியும். பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு, விஜய் தொலைக்காட்சி எனக்கு மற்றொரு வீடாக இருந்து வருகிறது.

    விஜய் தொலைக்காட்சியோடு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்ற போதும், பணியிடத்தில் நிகழும் மோசமான தாக்குதல்களையும், நெறியற்ற நடவடிக்கைகளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனது தொழில்முறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரால் நான் அவமானப்படுத்தப்பட்டதோடு, எனக்கு அநீதி நிகழ்த்தப்பட்டது.  பணியிடங்களில் பெண்களை மோசமாக நடத்துவது ஆண்கள் மட்டுமல்ல; பொறாமை பிடித்த பெண்களும் அப்படியே நடந்துகொள்கிறார்கள். கிடைக்கும் வாய்ப்புகளையும் ஒழிக்க முயல்கிறார்கள்.

    Also read... Amazon Prime, Hotstar, Netflix - ல் நடிகர் தனுஷின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் பட்டியல்

    பல ஆண்டுகள் அனுபவம்மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் இன்னல்களைச் சந்தித்து, தற்போது ஆண் துணையின்றி மூன்று குழந்தைகளை வளர்க்கும் தாயான எனக்கு, ஆதரவாக நிற்கவில்லை என்ற போதும், வாழ்க்கையை மோசமானதாக மாற்றுவது ஒரு பெண்ணாக இருப்பது வருந்தத்தக்கது.

    பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மற்ற போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். வெற்றியை விட, போட்டியில் பங்கேற்பதும், சவாலை எதிர்கொள்வதும் எனக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. என்னால் இந்தப் போட்டியில் இருந்து விலகிய சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கோருகிறேன். இந்த முடிவை எடுப்பதற்காகத் தொழில் நேர்த்தியோடு என்னுடன் நின்றவர் அவர்தான்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: