Vanitha Vijayakumar: சின்னத்திரை தொடரில் மீண்டும் வனிதா விஜயகுமார் என்ட்ரி

Vanitha Vijayakumar: சின்னத்திரை தொடரில் மீண்டும் வனிதா விஜயகுமார் என்ட்ரி

நடிகை அம்பிகாவுடன் வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமார் சின்னத்திரை தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சன் டிவியின் சந்திரலேகா தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்த வனிதா விஜயகுமார் பின்னர் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனிடையே தனது பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வந்தார்.

அந்த சேனலை தொடங்க உதவி செய்த பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே பிரிந்தார். அதைத்தொடர்ந்து தனது குழந்தைகளைக் கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்பும் அமைந்தது. ஆதம் தாசன் இயக்கத்தில் ஹீரோயினை மையப்படுத்திய அனல் காற்று என்ற படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடன் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் தொடரில் தான் கெஸ்ட் ரோலில் நடித்து வருவதாக இன்ஸ்டாகிராம் பக்க பதிவில் வனிதா தெரிவித்துள்ளார். இந்தியில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருக்கும் இத்தொடரில் நடிகை அம்பிகா, அமித் பார்கவ், கீர்த்தனா பட்வல் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.




வனிதா திருமதி ஹிட்லர் தொடரில் நடிப்பதை அறிந்த அவரது ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் வனிதா விஜயகுமார் நடிக்கும் எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: