நடிகை வனிதா விஜயகுமார் வீட்டில் நடந்த விசேஷம்

நடிகை வனிதா விஜயகுமார் வீட்டில் நடந்த விசேஷம்

மகளுடன் வனிதா விஜயகுமார்

தனது இளைய மகள் பூப்பெய்திருப்பதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
பிர்பல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சந்திரலேகா, நான் ராஜாவாக போகிறேன், மாணிக்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கும் இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தை தயாரித்திருந்தார். தனது தந்தையுடனான குடும்ப பிரச்னையில் சிக்கி சர்ச்சைகளை கிளப்பிய வனிதா கடந்த 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மகள் ஜெனிதாவை கடத்தி வந்ததாக வனிதாவின் முன்னாள் கணவர் கொடுத்த புகாரின் பேரில் வனிதாவை தெலங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டுக்கு வந்து விசாரித்தனர். பின்னர் தன்னை யாரும் கடத்தி வரவில்லை என்றும் முழு விருப்பத்துடன் தாயுடன் வந்ததாக ஜெனிதா வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து ஜோவிகா விஜயகுமார் மற்றும் ஜெனிதாவுடன் வசித்து வந்த வனிதா, மூன்றாவது முறையாக பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு சில மாதங்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் பிரச்னை காரணமாக பிரிந்தனர்.

இந்நிலையில் தற்போது வனிதா விஜயகுமாரின் இளைய மகள் ஜெனிதா பூப்படைந்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வனிதா, தனது மகள் பெரிய பெண்ணாகிவிட்டதாகவும், மகள்கள் இந்த உலகத்தில் விலை மதிப்பற்றவர்கள் என்றும் கூறி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
வனிதா விஜயகுமார் மற்றும் அவரது மகளுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: