சமீபத்தில் தமிழ் திரையுலகம் மட்டுமன்றி, கிட்டத்தட்ட தென்னிந்திய திரையுலகம் முழுவதையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து செய்தியாகும். சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த விவாகரத்து செய்திக்கு, சின்னத்திரை பிரபலமான வனிதா விஜயகுமார் நடிகை சமந்தாவிற்கு அட்வைஸ் செய்துள்ளார்.
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்து செய்ய இருப்பதை அதிகாரப்பூர்வமான செய்தியாக வெளியிட்டார்கள். இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக பல கிசுகிசுக்கள் கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களில் இடம்பெற்றிருந்தன. இதற்கான காரணம் சமந்தா சமூக வலைத்தளங்களில் தன்னுடைய அதிகார பூர்வமான கணக்குகளில் பெயரை மாற்றியதே ஆகும்.
நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொள்வது பல ஆண்டுகளாக, இந்திய திரையுலகில் தொன்று தொட்டு வரும் பழக்கம் என்பதால் இதுவும் கடந்து போகும் என்றே பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் மிகவும் அதிர்ச்சியூட்டும் செய்தியாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து செய்தி வெளிவந்துள்ளது.
also read : தேவதை அவள் ஒரு தேவதை.. நடிகை ஐஸ்வர்யா மேனனின் அழகிய புகைப்படங்கள்..
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல வெற்றிப் படங்களில் நாயகியாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இருவரும் முதன்முறையாக ஒன்றிணைந்து நடித்தார்கள். பல ஆண்டுகளாக காதலித்து இவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் விமர்சையாக இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்திற்குப் பின்னும் சமந்தா தொடர்ந்து திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்தார். இதற்குப் பிறகும் இவர் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸில் மிகவும் கவர்ச்சியான வேடத்தில் நடித்ததும், இவரின் கதாபாத்திரமும் பெரிய சர்ச்சைக்குள்ளானது. எல்லாம் சமந்தா பெரிதாக பொருட்படுத்தவில்லை. இந்தி திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும் மும்பையில் குடியேறுவதற்கு வீடு பார்த்துக் கொண்டிருப்பதாகவும் மேலும் சில செய்திகள் வெளிவந்தன. இந்த செய்திகள் எதையுமே ஆம் என்றோ இல்லை என்றோ சமந்தா தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
also read : ‘முதலில் வேஷம் போடுவதை நிறுத்துங்க’.. ஸ்டார்ட் ஆன நாமினேஷன்
அழகான காதல் ஜோடிகளாக வெற்றிகரமான திருமண வாழ்க்கையில் திருஷ்டி ஏற்பட்டது போல இவர்களின் பிரிவு அனைவரையும் வருத்தத்திற்குள்ளாக்கியது. அதிகாரப்பூர்வமான மணமுறிவை அறிவிப்பதற்கு முன்னர் இரண்டு தரப்பிலுமே சமரசம் முயற்சிகள் நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விவாகரத்துக்கு சமந்தா தான் காரணம் என்று பலரும் பலவிதமாக கூறி வருகின்றனர். இதற்கிடையே, நடிகை மற்றும் சின்னத்திரை கலைஞரான வனிதா விஜயகுமார் சமந்தாவிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சமந்தாவுக்கு ஆதரவாக, “சமூகம் என்றெல்லாம் எதுவும் இல்லை. உன்னுடைய வாழ்க்கையை நீ வாழு! நம்முடைய புகைப்படங்களை மட்டும் தான் மக்கள் பார்க்கிறார்கள். வீடியோக்களை அல்ல. வாழ்க்கை அற்புதமானது, கவலைப்பட்டு அதைத் தொலைக்க வேண்டாம். எது நடந்தாலும் அதற்கொரு காரணம் உள்ளது. உன்னுடைய பாதையில் முன்னேறிச் செல் என்று வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.