• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும்; அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை' - வனிதா காட்டம்

'சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும்; அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை' - வனிதா காட்டம்

வனிதா

வனிதா

தன்னைப் பற்றி அவதூறாக பேசிவரும் சூர்யாதேவி மன்னிப்புகேட்கத் தயாராக இல்லை. அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனிதா விஜயகுமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் சூர்யா தேவி என்பவர் வனிதா குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்தது வைரல் ஆனது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வனிதா விஜயகுமார் போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலிடமும் முறையிட்டுள்ளார்.

இதனை அறிந்த சூர்யாவும், வனிதா விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரிடம் முறையிட்டுள்ளார். தொடர்ந்து இருவரையும் சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாலை 6 மணிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் இருவரையும் சமாதானமாக செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.  இருப்பினும் இந்த பேசுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை வனிதா விஜயகுமார், தன் மீது அவதூறான கருத்துக்களை பகிர்ந்த சூர்யா தேவி, போலீசார் அறிவுறுத்தியும் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை என்றும் இந்த விவகாரத்தில் தான் சமரசமாக செல்லவே எண்ணியதாகவும் அவர் குறிப்பிட்டார். தனிப்பட்ட ஒருவர் குறித்து கீழ்த்தரமான கருத்துக்களை கூறுவது ஏற்புடையதல்ல என்றும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

இரு தரப்பிலும் பரபரப்பு புகார் - காவல் நிலையத்தில் நடிகை வனிதாவிடம் விசாரணை


தனது பாதுகாப்பு கருதி சூர்யா தேவி மீது போலீசார் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் ஒருவர் குறித்து தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வனிதா விஜயகுமார் கேட்டுக்கொண்டார். சூர்யா தேவி சமரசத்திற்கு ஒத்துவராததால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல இருப்பதாக வனிதா விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: