• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக்பாஸ் ஜோடிகள்: ரம்யா கிருஷ்ணனுடன் மோதல் ஏன்? வனிதாவின் சரவெடி பதில்!

பிக்பாஸ் ஜோடிகள்: ரம்யா கிருஷ்ணனுடன் மோதல் ஏன்? வனிதாவின் சரவெடி பதில்!

ரம்யா கிருஷ்ணன் - வனிதா விஜயகுமார்

ரம்யா கிருஷ்ணன் - வனிதா விஜயகுமார்

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் என்ன நடந்தது? என்பது குறித்து வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

  • Share this:
வனிதா விஜயகுமாரை சுற்றி அடிக்கடி சர்ச்சைகள் எழுவது வழக்கம். லேட்டஸ்டாக, விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர், அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறி புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட வனிதா விஜய்குமார், அடுத்து ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ’கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்த அவர் ’பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மட்டும் ஜோடிகளாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். கேபி - ஆஜித், ஜித்தன் ரமேஷ் - சம்யுக்தா உள்ளிட்டோருடன் வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தியுடன் இணைந்து நடனமாடினார். ரம்யா கிருஷ்ணன் - நகுல் போட்டியின் நடுவர்களாக இருந்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற சுற்றில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஆடிய வனிதா விஜயக்குமாரின் நடனம் ரசிக்கும்படியாக இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நடுவரான ரம்யா கிருஷ்ணன் காரசாரமான விமர்சனத்தையும், இன்னும் நன்றாக ஆட வேண்டும் எனவும் தன்னுடைய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



அவரின் கருத்தை ஏற்க மறுத்த வனிதா, மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சரியான விமர்சனத்தை மட்டுமே முன்வைக்க வேண்டும், எங்களை யாருடனும் ஒப்பிடுவதை நாங்கள் விரும்பவில்லை, எங்களின் தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டுங்கள், யாரையும் ஜட்ஜ் செய்வதற்கு உங்களுக்கு உரிமையில்லை என காட்டமாக பதிலடி கொடுத்தார். வனிதாவின் பதிலை எதிர்பார்க்காத ரம்யா கிருஷ்ணன், இது ஒரு போட்டி, ஒவ்வொரு நடனத்துக்கும் மார்க் போட வேண்டும், ஜட்ஜ் செய்வதற்கு மட்டுமே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம், நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை நீங்கள் சொல்லக் கூடாது என கோபமாக பதிலளித்தார்.



அவருடைய பதிலை ஏற்காத வனிதா, நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். போட்டியில் இருந்து எதற்காக வெளியேறினார்? என்பது குறித்து இப்போது தன்னுடைய யூ டியூப் சேனலில் விளக்கம் அளித்துள்ளார். அதில், போட்டி குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதும், நிகழ்ச்சி செல்வதும் வேறு விதமாக இருப்பதாக தெரிவித்தார். சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் தன்னை மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த அவர், 200 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் சக கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Also read... "இறுதியாக கடின உழைப்பு பலனளிக்கிறது" உடல் எடையை குறைத்த நடிகை சமீரா ரெட்டி உற்சாகம்!

ரம்யா கிருஷ்ணனின் கருத்துக்கள் தன்னையும், சுரேஷ் சக்கரவர்த்தியையும் காயப்படுத்தியதாக தெரிவித்துள்ள வனிதா, போட்டியில் இருந்து வெளியேறியதற்காக சுரேஷ் சக்கரவர்த்தியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், இது என்னுடைய வாழ்க்கை, என் விருப்பம்போல் முடிவெடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: