Vani Bhojan : ஹாலிவுட் நடிகை போன்ற ஸ்டைலிஷ் லுக்கில் வாணி போஜன் - வைரலாகும் ஃபோட்டோ ஷூட் வீடியோ!

வாணி போஜன்

2010-ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இரவு திரைப்படத்தில் ஹெவந்திகா என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

  • Share this:
வாணி போஜனை தெரியாத சின்னத்திரை ரசிகர்கள் இருக்கவே முடியாது. சின்னத்திரையின் நயன்தாரா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் சன் டிவி-யில் ஒளிபரப்பான ப்ளாக் பஸ்டர் சீரியலான தெய்வமகள் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.

சீரியல் நடிகையாக இருந்த வாணி போஜன் பின்னர் தனது நடிப்பு திறமையால் வெள்ளித்திரையிலும் நல்ல நடிகையாக இருந்து வருகிறார். சன் டிவி-யில் தெய்வமகள் சீரியலில் நடிப்பதற்கு முன்னர் விஜய் டிவி-யில் 2012-ம் ஆண்டு ஒளிபரப்பான ஆஹா-வில் சுருதி என்ற கேரக்டரிலும் அதே ஆண்டு ஜெயா டிவி-யில் ஒளிபரப்பான மாயாவில் மாயாவாகவும் நடித்துள்ளார்.

தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு சீரியலிலும், சன் டிவி-யில் 2017-ல் ஒளிபரப்பான அசத்தல் சுட்டிஸ் மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் என 2 நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் வந்தார். இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

ALSO READ | லாக்டவுனில் சாலையோரவாசிகளுக்கு உதவும் சன் டிவி சீரியல் நடிகை

அந்த வகையில் 2010-ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இரவு திரைப்படத்தில் ஹெவந்திகா என்ற கேரக்டரில் நடித்துள்ளார். பின்னர் சின்னத்திரையில் புகழ் பெற்ற பிறகு மீண்டும் வெள்ளிதிரைக்கு சென்ற இவர் ஓ மை கடவுளே மூலம் பிரபலமானார்.

ஓடிடி-யில் சமீபத்தில் வெளியான "மலே­சியா டு அம்­னீ­சியா" திரைப்படத்தில் நடிகர் வைபவுடன் இணைந்து யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் கார்த்திக் செளத்ரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாக்கி வரும் "பாயும் ஒளி நீ எனக்கு"படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.

 



 




View this post on Instagram





 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)






 

பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, தாழ் திறவா என அடுத்தடுத்தது ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்திருந்தாலும் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாகவே இருப்பார். மேலும் தனது அழகான போட்டோ ஷூட் புகைப்படங்களை அவ்வப்போது ஷேர் செய்து ரசிகர்களை மகிழ வைப்பார்.

ALSO READ | ’அட்டகாசம் அச்சுமா’ - முன்னணி பண்பலையில் RJ-வாக பிக் பாஸ் அர்ச்சனா!

இந்நிலையில் வாணி போஜனின் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் அண்மையில் தனது போட்டோஷூட்டின் ஸ்னீக் பீக் புகைப்படங்கள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் மிஸ் இஸ்ரேல் பட்டம் வென்ற மாடலிங் அழகி மற்றும் ஹாலிவுட் நடிகையான கால் கடோட் வர்ஸானோவின் (Gal Gadot Varsano) டிரெஸ் ஸ்டைலை பிரதிபலிக்கும் வகையில் காணப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பான ரீல் ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள வாணி போஜன் "எனது ஃபேஷன் விளையாட்டு முதலிடம் என்பதை நான் எப்போதும் உறுதி செய்கிறேன், #WonderWoman1984-ஐ விட யார் சிறந்த உத்வேகமாக இருக்க முடியும்"என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாணி போஜனின் ஸ்டைலான லுக் குறித்து பாராட்டி கருத்து தெரிவிக்கின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published: