• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 200 எபிசோட்களை கடந்த பிரபல சன் டிவி சீரியல்.. ரசிகர்களுக்கு இன்ஸ்டாவில் நன்றி தெரிவித்த நடிகர்!

200 எபிசோட்களை கடந்த பிரபல சன் டிவி சீரியல்.. ரசிகர்களுக்கு இன்ஸ்டாவில் நன்றி தெரிவித்த நடிகர்!

சன் டிவி சீரியல்

சன் டிவி சீரியல்

சீரியலில் நடித்து வரும் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

  • Share this:
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி அன்று சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிரபல தொலைக்காட்சி சீரியல் "வானத்தை போல" வெற்றிகரமாக 200 எபிசோட்களை கடந்துள்ளது. இந்த வெற்றியை சீரியல் குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். சீரியலில் நடித்து வரும் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகர் திலக் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், வானத்தை போல சீரியல் குழுவினர் கேக்குகளை வெட்டி கொண்டாடினர். மேலும் அந்த கொண்டாட்டத்தில் நடிகர்கள் திலக், மவுனிகா, ஸ்வேதா கெல்கே, தமன் மற்றும் பிற குழு உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இதுதவிர, படப்பிடிப்பு தலத்தில் இருந்து எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு நடிகர் திலக் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். அதில், "வானத்தை போல சீரியல் 200வது எபிசோட் செலிபரேஷன். உங்கள் ஆதரவுக்கு நன்றி. வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒரு மணிநேர சிறப்பு எபிசோட் வருகிறது..பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை பார்க்க மறக்காதீர்கள்... இன்னும் நிறைய திருப்பங்கள் இருக்கின்றன. தொடர்ந்து உங்கள் ஆதரவை கொடுங்கள்(sic) ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வானத்தை போல நிகழ்ச்சியில் வெற்றி காதாபாத்திரத்தில் திலக்கும், துளசியாக ஸ்வேதா கெல்கே, சின்ராசுவாக தமன் குமார், சந்தியாவாக தேப்ஜனி மோடக், கார்த்தியாக ராஜபாண்டி துரைசாமி, விஷ்வாவாக தரிஷ் ஜெயசீலன், சங்கர பாண்டியாக மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் துளசி-சின்ராசு கேரக்டர்கள் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளது. சினிமாவில் நடித்ததை விட சின்ராசு கதாபாத்திரத்தில் நடிக்கும் தமன் குமார் தற்போது அதிகம் மக்களிடம் ரீச் ஆகியுள்ளார். இவர் வெள்ளித்திரையில் முதன்முதலில் 2011ல் படித்துறை என்ற படத்தில் நடித்தார்.

 



 




View this post on Instagram





 

A post shared by Ashwanth Seenu (@thilak.tilu)








 




View this post on Instagram





 

A post shared by Ashwanth Seenu (@thilak.tilu)






 

ஆனால் படம் ரிலீஸாகவில்லை. பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு சும்மா நச்சுனு இருக்கு, தொட்டால் தொடரும், சேது பூமி, புயலா கிளம்பி வரோம், 6 அத்தியாயம், நேத்ரா என போன்ற சில படங்களில் நடித்தார். தற்போது கண்மணி பாப்பா, யாழி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். சில டெலிஃபிலிம்களிலும் நடித்துள்ளார் தமன்குமார். பல படங்களில் நடித்த பிறகு சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: