‘வலிமை’ பட இயக்குநர் அப்பா ஆனார் - ரசிகர்கள் வாழ்த்து மழை

இயக்குநர் ஹெச். வினோத் | Photos : Instagram

இயக்குநர் ஹெச்.வினோத்திற்கு ஆண் குழந்தைக்கு பிறந்துள்ளது.

  • Share this:
‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். முதல் படத்திலேயே அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இவர் இரண்டாவதாக ‘தீரன் அதிகாரம்’ ஒன்று திரைப்படத்தை இயக்கினார்.

உண்மைச் சம்பவங்களை அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் கண்களுக்கு விருந்தாக்கிய ஹெச்.வினோத்துக்கு அத்திரைப்படம் மாபெரும் வெற்றியைக் கொடுத்தது. அதன் பின்னர் ரசிகர்களால் உற்று நோக்கப்படும் இயக்குநராக உருவெடுத்தார். திரைத்துறையில் அறிமுகமாகி மூன்றாவது படத்திலேயே உச்ச நட்சத்திரமான அஜித்துடன் இணைந்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கினார்.

பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியிருந்தாலும் தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து மீண்டும் ‘வலிமை’ படத்தில் அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி இணைந்தது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இயக்குநர் வினோத் தந்தையான மகிழ்ச்சியான நிகழ்வும் நடந்திருக்கிறது.

மேலும் படிக்க: ஓவியாவின் காதல் பதிவு? லவ்வர் இவர் தானா?

இயக்குநர் வினோத்திற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதையறிந்த ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ‘வலிமை’ படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை கேட்டு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தகுந்த நேரத்தில் முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் என்று படக்குழு அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: