‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள் - வைரமுத்து ட்வீட்

‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள் - வைரமுத்து ட்வீட்

வைரமுத்து ட்வீட்

இணையத்தில் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. பாடல் வரிகளை மாற்றியமைத்து இவ்விதம் பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

  • Share this:
    நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

    9வது நாளாக பெட்ரோல் டீசல் விலை நேற்றைய தினமும் உயர்ந்தது. அந்த வகையில் ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் தனியார் நிறுவன பெட்ரோல் லிட்டர் 100 ரூபாய் 13 காசுகளாக விற்பனையானது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    சென்னையிலும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதனிடையே இணையத்தில் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

    இது தொடர்பாக 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு;பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ எனும் மீம்ஸ் இணையத்தில் அதிகமாக வைரலானது.



    இது மட்டும் அல்ல 'சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்

    ஆஹா அவனே கொள்ளையனடி'

    'உசுரே போகுது உசுரே போகுது
    பெட்ரோல் விலைய பார்க்கையிலே...'

    'ஒரு பொய்யாவதுசொல்கண்ணே
    பெட்ரோல் விலை குறையும் என்று...’ என பாடல் வரிகளை மாற்றியமைத்து இவ்விதம் பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    ALSO READ :   'காதல் வந்தால் சொல்லி அனுப்பு.. பெட்ரோல் இருந்தால் வருகிறேன்' - இணையத்தில் வைரலாகும் பெட்ரோல் விலை உயர்வு மீம்ஸ்கள்



    இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள் என ட்வீட் செய்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published: