”தேசிய விருதை விட அந்தப் படத்தை பற்றி மக்கள் பேசிய விருதுதான் சிறந்தது” - வைரமுத்து

”இந்த ஆண்டு நல்ல திரைப்படம் தமிழில் இருப்பதாக நினைத்தேன், ஆனால் அதற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை, இதில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை, ஆனால் அரசியல் இருந்தால் கண்டிக்கதக்கது”

Web Desk | news18-tamil
Updated: August 19, 2019, 8:47 AM IST
”தேசிய விருதை விட அந்தப் படத்தை பற்றி மக்கள் பேசிய விருதுதான் சிறந்தது” - வைரமுத்து
வைரமுத்து
Web Desk | news18-tamil
Updated: August 19, 2019, 8:47 AM IST
ஒரு படத்திற்கு தேசிய விருதை விட பேசிய விருது தான் பெரிது என்றும், அது தமிழ் படங்களுக்கு கிடைத்துள்ளது எனவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற அப்போலோ மருத்துவமனையின் புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் வைரமுத்து.

விழாவில் பேசிய அவர், “இந்தியா சுகாதாரத்துறையில் 67-வது இடத்தில் உள்ளது எனவும், எப்போது இதனை தாண்ட போகிறோம். இந்தியாவுக்கு தலை நகரம் டெல்லியாக இருக்கலாம், ஆனால் மருத்துவத்துக்கு தலைநகரம் சென்னைதான்.


மருத்துவத்துறையில் பத்மஸ்ரீ பெறுவது அவ்வளவு எளிதில்லை, அது ஒரு பெரிய வரம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் எல்லாம் சக்கரவர்த்திகள். இந்தியாவில் 90 சதவீதம் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர்.

மருத்துவத்தைப் பற்றி வெளியில் சொல்லாததுதான் அந்தத்துறையின் வீழ்ச்சி.

அடுத்த நூற்றாண்டில் சீனாவும் இந்தியாவும் மட்டும்தான் வல்லரசு நாடுகள் எனவும் ஐரோப்பா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பின்னடைய போகிறது.

Loading...

இன்று மருத்துவத்தின் தேவை இந்தியாவில் அதிகமாக இருப்பதால் 1000 பேருக்கு ஒரு மருத்துவர் வந்தால்தான் தேவை பூர்த்தி அடையும். இந்தியாவில் இன்னும் 6 லட்சம் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு நல்ல திரைப்படம் தமிழில் இருப்பதாக நினைத்தேன், ஆனால் அதற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை, இதில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை, ஆனால் அரசியல் இருந்தால் கண்டிக்கதக்கது.விருது கிடைக்கவில்லை என்று தமிழ் கலைஞர்கள் வருத்த பட வேண்டாம், ஒரு படத்திற்கு தேசிய விருதை விட பேசிய விருது தான் பெரிது அது தமிழ் படங்களுக்கு கிடைத்துள்ளது என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.

Also watch: அதிக லாபம் ஈட்டும் மூலிகை சோப்பு தயாரிப்பது எப்படி?

First published: August 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...