'நூலகங்கள் அதிகரித்தால்தான் தமிழகம் முன்னேறும்'- பாடலாசிரியர் வைரமுத்து

'நூலகங்கள் அதிகரித்தால்தான் தமிழகம் முன்னேறும்'- பாடலாசிரியர் வைரமுத்து

பாடலாசிரியர் வைரமுத்து

மானுட தேவையில் முதன்மையானது உணவு என்றும், அதற்கு அடுத்ததாக அறிவை நோக்கி செல்ல வேண்டிய சமூகம் மதுக்கடைகளை நோக்கி செல்வதாக வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மதுக்கடைகளை விட நூலகங்களின் எண்ணிக்கை எப்போது அதிகரிக்கிறதோ, அன்றுதான் தமிழகம் முன்னேறும் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

  சென்னை கே.கே.நகரில் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்த அவர், மானுட தேவையில் முதன்மையானது உணவு என்றும், அதற்கு அடுத்ததாக அறிவை நோக்கி செல்ல வேண்டிய சமூகம் மதுக்கடைகளை நோக்கி செல்வதாக வேதனை தெரிவித்தார்.

  தமக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தவறான தகவல் வெளியானது என்றும், வழக்கமான பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றதாகவும் வைரமுத்து விளக்கம் அளித்தார்.

   

     இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். முன்னதாக கவிஞர் வைரமுத்து திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவியது. இதுபற்றி விளக்கம் அளித்த வைரமுத்துவின் மேலாளர் வழக்கமான பரிசோதனைக்காக வைரமுத்து மருத்துவமனை சென்றதாக விளக்கமளித்தார்.
  Published by:Sankaravadivoo G
  First published: