ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vadivelu: காமெடி நடிகர்களுடன் வடிவேலு - வைரலாகும் படம்!

Vadivelu: காமெடி நடிகர்களுடன் வடிவேலு - வைரலாகும் படம்!

காமெடி நடிகர்களுடன் வடிவேலு

காமெடி நடிகர்களுடன் வடிவேலு

விரைவில் ஒரு OTT-யில் வெளியாகும் வலைதொடரில் நம்மை மீண்டும் சிரிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது நகைச்சுவை மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர் பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார்.

  இறுதியாக சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலு, விரைவில் ஒரு OTT-யில் வெளியாகும் வலைதொடரில் நம்மை மீண்டும் சிரிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அவர் மற்ற காமெடி நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட, படம் ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

  நீண்ட நாட்களுக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு அண்ணணை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி.

  பின் குறிப்பு - படித்துரை பாண்டி & Co நகை கடை உரிமையாளர் ( சாம்ஸ் ) அண்ணன் உடன் சமரசம் செய்து கொண்டோம் 😂😂

  Posted by Ambani Shankar on Friday, 12 February 2021

  வேதிகாவின் ஸ்டன்னிங் படங்கள்!

  நடிகர் அம்பானி ஷங்கர் சமீபத்தில் ஒரு விழாவில் வடிவேலு மற்றும் நடிகர் சாம்ஸை சந்தித்துள்ளார். அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

  ”நீண்ட நாட்களுக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு அண்ணணை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. பின் குறிப்பு - படித்துரை பாண்டி & Co நகை கடை உரிமையாளர் ( சாம்ஸ் ) அண்ணன் உடன் சமரசம் செய்து கொண்டோம்” என தலைப்பிட்டு அந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

  கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் இடம்பெற்ற பிரபல காமெடியை தான் ஷங்கர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Vadivelu