வைகை புயல் வடிவேலு அடுத்ததாக நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் களமிறங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து படப்பிடிப்பையும் துவங்கினார்கள் படக்குழு. படப்பிடிப்பு 10 நாட்கள் நடந்த நிலையில் வடிவேலுவுக்கும், இயக்குனர் சிம்புதேவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து படப்பிடிப்பு நின்றுவிட்டது. இதை தொடர்ந்து படத்தில் இருந்து வெளியேறுவதாக வடிவேலு அறிவித்தார். 24-ம் புலிகேசி பிரச்சனை தயாரிப்பாளர் சங்கம் வரை போனது. வடிவேலுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
அவரோ, தான் எந்த பிரச்சனையும் செய்யவில்லை என்றும், படப்பிடிப்பை தொடங்க தாமதம் செய்ததால் தனக்கு பொருளாதார இழப்பும், மனஉளைச்சலும் ஏற்பட்டதாகவும், அதனால் படத்தில் நடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
Also read... எனக்கு என்ட் கார்டே இல்ல...! ஷங்கரை வெளுத்து வாங்கிய வடிவேலு
அப்போது, நடிகர் வடிவேலு நிபந்தனை எதுவுமின்றி, படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் அல்லது சம்பளம் மற்றும் இதுவரை ஆன என ரூ.9 கோடியை படக்குழுவுக்கு வழங்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நடிகர் வடிவேலு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்றக்கொள்ளாததால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியது.
இந்நிலையில், நேசமணி ட்ரெண்டிங் குறித்து தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த வடிவேலு அந்த நிகழ்வு தனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
மேலும், தயாரிப்பாளர்கள் ரெட் கார்ட் கொடுத்தால் என்ன/ உலகலாவிய சினிமா இணையதளமாக உள்ள நெட்பிளிக்சில் நடிக்க உள்ளதாகவும் வடிவேலு தெரிவித்துள்ளார்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.