• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நாய் சேகர் மூலமாக இரண்டாவது ஆட்டத்துக்கு தயாராகும் வடிவேலு?

நாய் சேகர் மூலமாக இரண்டாவது ஆட்டத்துக்கு தயாராகும் வடிவேலு?

வடிவேலு

வடிவேலு

தலைநகரத்தில் வரும் வடிவேலின் கதாபாத்திரமான நாய் சேகரை மையாக வைத்து ஒரு படத்தை சுராஜ் இயக்க உள்ளார் என்று தகவல் வெளியாகிவுள்ளது.

  • Share this:
    இம்சை அரசன் 24 ஆம் புலிக்கேசி படத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து, வடிவேலுவை எந்தப் படத்திலும் ஒப்பந்தம் செய்யவில்லை. ஒன்று படத்தை முடித்துத்தர வேண்டும், இல்லை நஷ்டமான ஆறு கோடியை தர வேண்டும். இதுதான் அம்சை அரசன் 24 ஆம் புலிக்கேசி தயாரிப்பாளர் ஷங்கர் தரப்பு வைத்திருக்கும் நிபந்தனை. இரண்டுக்கும் வடிவேலு தயார் இல்லை.

    வடிவேலு சினிமாவுக்குப் பதில் ஓடிடி தளத்தில் நடிக்கயிருக்கிறார் என்ற தகவல் உள்ளது. ஆனால், வடிவேலுவை பெரிய திரையில் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகின்றனர். அதற்கேற்ப, சுராஜின் நாய் சேகர் படத்தில் வடிவேலு நடிப்பார் என்ற தகவல் உறுதியாக முன்வைக்கப்படுகிறது.

    சுராஜின் இயக்கத்தில் வெளிவந்த தலைநகரம் படத்தில் வடிவேலு நாய் சேகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். "ஹேய்... இதுதான் அழகுல மயங்குறதா?," "என்னை வச்சு காமெடி கீமடி எதுவும் பண்ணலையே", போன்ற பல அக்மார்க் வடிவேலு வசனங்களை கொண்டிருந்த படம் தலைநகரம். அதன் பிறகு சுராஜின் மருதமலை படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் காமெடியும் வடிவேலுவின் மைல்கற்களில் ஒன்று

    Photos : நடிகை மனிஷா கொய்ராலாவின் யாரும் பார்க்காத புகைப்படங்கள்..



    ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என வடிவேலு முடிவெடுத்து, நகைச்சுவை வேடங்களை ஒதுக்கி, ரசிகர்களை காயவிட்ட காலகட்டத்தில், மறுபடியும் அவரை நகைச்சுவை வேடத்துக்கு கொண்டு வந்தவர் சுராஜ். அவரது கத்திச்சண்டை படத்தில்தான் வடிவேலு மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்துக்கு திரும்பினார். அப்படி சுராஜுடன் நல்ல புரிந்துணர்வு வடிவேலுக்கு உண்டு.

    Also Read : செக்கை இன்னும் திருப்பித் தரவில்லை - சிம்பு மீது புதிய குற்றச்சாட்டு

     

    தலைநகரத்தில் வரும் வடிவேலின் கதாபாத்திரமான நாய் சேகரை பெயராக்கி ஒரு படத்தை சுராஜ் இயக்க உள்ளார். இதில் வடிவேலு நடிக்கிறார். வடிவேலின் இரண்டாம் வருகையின் தொடக்கமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள். இன்னும் சில தினங்களில் முறைப்படியான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: