ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Exclusive நான் வெப் சீரிஸில் நடிக்கிறேனா? - வடிவேலு பதில்

Exclusive நான் வெப் சீரிஸில் நடிக்கிறேனா? - வடிவேலு பதில்

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வெப் சீரிஸில் நடிப்பதாக வெளியான தகவல்களுக்கு நடிகர் வடிவேலு மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாக இருந்த இம்சை அரசன் 24-ம் புலிகேசி திரைப்படம் சில பிரச்னைகளால் நின்று போனது. இதையடுத்து நேசமணி ஹேஷ்டேக் ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டான சமயத்தில் தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த வடிவேலு, 24-ம் புலிகேசி பட விவகாரத்தில் எனக்கு தயாரிப்பாளர்கள் ரெட் கார்ட் கொடுத்தால் என்ன? நெட்ஃபிளிக்ஸ் போன்ற வலைத் தொடர்களில் நடிப்பேன் என்றார்.

இதையடுத்து வடிவேலு விரைவில் இணையத் தொடரில் வலம் வருவார் என்று அவரது ரசிகர்கள் காத்துக் கிடந்தனர். புத்தாண்டு தினத்தில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தகவல்கள் தீயாகப் பரவின.

இந்நிலையில் இதுகுறித்து நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகர் வடிவேலு, நான் வெப் சீரிஸ் எதிலும் நடிக்கவில்லை. ஆனால் படம் தொடர்பான அறிவிப்பு ஜனவரி மாதத்தில் வெளிவரும் என்றார். மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசனுடன் தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு இணைந்து நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

படிக்க... பார்க்க: லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் பாடல் காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?

' isDesktop="true" id="236873" youtubeid="bfVxK5IO_5w" category="entertainment">

Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Vadivelu