Home /News /entertainment /

ராஜ்கிரணுடனான இந்த சந்திப்பு தான் வடிவேலுவின் சினிமா பயணத்தின் தொடக்கம் ! சுவாரஸ்யமான கதை..

ராஜ்கிரணுடனான இந்த சந்திப்பு தான் வடிவேலுவின் சினிமா பயணத்தின் தொடக்கம் ! சுவாரஸ்யமான கதை..

வடிவேலு

வடிவேலு

வடிவேலு எப்படி சினிமாவுக்கு வந்தார் என்று உங்களுக்கு தெரியுமா ?

  படம் நடிக்கிறாரோ இல்லையோ. வடிவேலுதான் எப்போதும் டாக் ஆஃப் தி டவுன். அவர் இல்லாமல் மீம்ஸோ, நையாண்டியோ இல்லை. படமே வேண்டாம் என்று ஒதுங்கிப் போய் இருந்தாலும், கான்ட்ராக்டர் நேசமணியை உலக அளவில் ட்ரெண்டாக்கி அவரை பேச வைக்கிறார்கள். இந்த அசராத புகழுக்கு அடித்தளம் போட்ட நிகழ்வின் அரிய சாட்சி இந்தப் புகைப்படம். 

  என்பதுகளின் இறுதியில் ராமராஜனை வைத்து ராஜ்கிரண் படம் தயாரித்த நேரம். ஒரு திருமணத்துக்காக மதுரை வருகிறார். காலையில் திருமணம் முடிகிறது. இரவுதான் ரயில். அதுவரை ஹோட்டல் அறையில் போரடிக்குமே என்று திருமண மாப்பிள்ளை, "என் ப்ரெண்ட் ஒருத்தனை அனுப்புறேன். நல்ல காமெடியா பேசிட்டிருப்பான்" என்று ஒரு நபரை அனுப்பி வைக்கிறார். அந்த நண்பனும் வந்து, ஊரில் போடும் அலப்பறைகளை பாடிலாங்வேஜுடன் சொல்கிறார். ராஜ்கிரணுக்கு ஒரே சிரிப்பு. அந்த நபரை பிடித்துப் போகிறது. இரவு வண்டியேறி சென்னை வந்துவிடுகிறார்

  Also Read: தள்ளிப்போன தனுஷ் கால்ஷீட்..நேரத்தை வீணாக்காமல் வேறு நடிகரை தேர்ந்தெடுத்த மாரி இயக்குனர்..

  இரண்டு வருடங்கள் கழித்து, 1991 இல் திணடுக்கல்லில் என் ராசாவின் மனசிலே படத்தின் ஷுட்டிங். இரண்டு காட்சிகள் வருகிற சின்ன வேடம் ஒன்று இருக்கிறது. புதிதாக யாரையாவது போடலாம் என்று யோசிக்கிற ராஜ்கிரணுக்கு மதுரை ஹோட்டலில் சந்தித்த நபர் நினைவு வருகிறார். சென்னையில் உள்ள தனது அலுவலகத்துக்கு போன் செய்கிறார். அவர்கள் ராஜ்கிரண் கலந்து கொண்ட திருமணத்தின் மாப்பிள்ளையை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்கிறார்கள். மறுநாள் காலை திணடுக்கல்லில் நடந்த ஷுட்டிங்கில் அந்த நபர் கலந்து கொள்கிறார். அவர்தான் வடிவேலு. "சவுக்கியமாண்ணுதானே கேட்டேன், அதுக்குப் போய் அடிக்கிறீங்களே" என்று கவுண்டமணியிடம் அடி வாங்கியபடி பேச வேண்டும். வடிவேலு கூடுதல் பிட்டாக, "படக்கூடாத இடத்துல அடி பட்டுரப் போவுதுண்ணே" என்கிறார். ராஜ்கிரணுக்கு அந்த எக்ஸ்ட்ரா பிட் பிடித்துப் போகிறது. கேரக்டரை நீட்டித்து, ஒரு பாடல் வரும்படி செய்கிறார். அதுதான் போட போடா புண்ணாக்குப் பாடல். வடிவேலு என்ற நடிகரின் வாழ்க்கை அப்படித்தான் தொடங்கியது.

  Photos: நடிகை தமன்னாவின் வொர்க் அவுட் புகைப்படங்கள்..

  என் ராசாவின் மனசிலே படம் முடிந்த பிறகு ராஜ்கிரணுடன் வடிவேலு சென்னை வருகிறார். அவரது அலுவலகத்தில் தங்கியிருந்து படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார்.  1992 இல் கமலுடன் சிங்காரவேலன். படம் நெடுக வடிவேலை கவுண்டமணி திட்டியும், அடித்தும் கொண்டிருப்பார். கமல் ஒருநாள் வடிவேலிடம், ஏன் இப்பிடி பண்றார் என்று கேட்க, அவர் அப்படித்தான் என்கிறார் வடிவேலு. தான் அடுத்து படம் பண்ணும்போது கூப்பிடுகிறேன் என்கிறார் கமல். அதே வருடம் தேவர்மகன் எடுக்கையில் வடிவேலுக்கு கமலிடமிருந்து அழைப்பு வருகிறது. அதுவரை சின்ன நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடத்தை தருகிறார். மறக்க முடியாத கதாபாத்திரம். அதன் பிறகு நடந்தவை சரித்திரம்

  வடிவேலின் சாதனை அனைத்துக்கும் துவக்கப்புள்ளி ராஜ்கிரணுடனான சந்திப்பு. அந்தவகையில் முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படம் இது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Cinema

  அடுத்த செய்தி