ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வட சென்னை படத்துக்காக உருவாக்கப்பட்ட சிறை - வீடியோ

வட சென்னை படத்துக்காக உருவாக்கப்பட்ட சிறை - வீடியோ

வட சென்னை

வட சென்னை

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  வட சென்னை படத்தில் அமைக்கப்பட்ட ஜெயில் செட் அமைப்பை படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

  இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து வடசென்னை படம் உருவாகியுள்ளது. சென்னையின் முப்பது ஆண்டுகால வரலாற்றை விவரிக்கும் விதமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு, வட சென்னையை கதைக்களமாக வைத்து, கடந்த இரண்டு வருடங்களாக இப்படம் எடுக்கப்பட்டு வந்தது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த மாதம் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

  இந்த படத்தில் நடிகர் தனுஷூடன் இயக்குநர் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யாராஜேஷ், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

  இந்நிலையில் படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் படத்திற்காக உருவாக்கப்பட்ட ஜெயில் செட்டை படத்தின் மேக்கிங் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் அக்டோபர் மாதத்தில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  ' isDesktop="true" id="56341" youtubeid="tnJOUSox0jo" category="entertainment">

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Dhanush, Vada chennai, Vetrimaran