ரஜினி வசனத்தை நீங்கள் பேசினால் பரிசு கிடைக்கும் - வார்தா ஆப் அசத்தல் அறிவிப்பு

ரஜினி வசனத்தை நீங்கள் பேசினால் பரிசு கிடைக்கும் - வார்தா ஆப் அசத்தல் அறிவிப்பு

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் வார்தா ஆப் அசத்தலான போட்டியை அறிவித்துள்ளது.

 • Share this:
  டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்த் 70வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தனது அரசியல் வருகை குறித்து ரஜினி உறுதி செய்துள்ளதால் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட அவரது ரசிகர்கள் முடிவுசெய்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்துள்ள வார்தா ஆப் (vaarta app) அசத்தலான புதிய போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. மேலும் இந்த போட்டிக்கு "தலைவர்காஸ்ட்" (thalaivarcast) என்று பெயரிட்டுள்ளது. மேலும், இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கும் ரசிகர்கள் அனைவருக்கும் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

  இந்த போட்டியில் பங்கேற்க பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்

  பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் பாட்காஸ்டை (postcast) வார்தா ஆப்பில் பதிவுசெய்யுங்கள்.

  Step 1: வார்தா ஆப்பில் உள்நுழைந்த பிறகு, முகப்புப் பக்கத்தில் உள்ள "அப்லோடு" ஐகானைக் கிளிக் செய்யவும்.

  Step 2: இங்கே நீங்கள் ஏற்கனவே பதிவுசெய்த ஆடியோ பைல்களைப் பதிவேற்ற முடியும்.

  Step 3: பின்னர் உங்கள் எபிசோட் தலைப்பு, கவர் படம், பைலின் வகை மற்றும் மொழி ஆகியவற்றை உள்ளிடவும்.

  Step 4: இந்த போட்டிக்கு தகுதி பெற, '#ThalaivarCast' என்ற டேக்கை உள்ளிடவும். (குறிப்பு: டேக்கை சேர்க்காவிடில் உங்கள் நுழைவு ஏற்றுக்கொள்ளப்படாது!)

  Step 5: இறுதியாக விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு பப்லிஷ் என்பதைக் கிளிக் செய்தால் உங்கள் பைல் சமர்ப்பிக்கப்பட்டுவிடும்.

  Also read: சார்பட்டா கதை என்னுடையது இல்லை - அறம் கோபி விளக்கம்

  இந்த போட்டியில் பங்கேற்க பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள்

  1. இந்த போட்டிக்கு நீங்கள் 5 எபிசோடுகள் வரை வார்தா ஆப் வழியாக பதிவேற்றலாம். (நீங்கள் 5-க்கும் குறைவான எபிசோடுகளையும் சமர்ப்பிக்கலாம்.)

  2. நீங்கள் சமர்ப்பிக்கும் ஆடியோ ஏற்கனவே வார்தாவில் வெளியிடப்பட்டதாக இருக்கக் கூடாது. நீங்கள் புதிய ஆடியோவை உருவாக்கி அதை இங்கே பதிவேற்றலாம். இருப்பினும், நீங்கள் ஏற்கனவே சமர்ப்பித்த ஆடியோ வேறு எந்த தளத்திலும் / ஊடகத்திலும் வெளியிடப்படலாம்.

  3. நீங்கள் சமர்ப்பிக்கும் ஆடியோ ஸ்கிரிப்ட் உங்களால் தயார் செய்யப்பட்டு, நீங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். உங்கள் நண்பர்களுடன் உரையாடல் வடிவத்திலும் பதிவுசெய்து பதிவேற்றலாம்.

  4. நீங்கள் அப்லோடு செய்யும் எபிசோடின் ஒரு பகுதியாக எந்த இசையையும் பதிவேற்ற வேண்டாம். குறைவான இசையாகவே இருந்தாலும், உரிமம் இல்லையென்றால் அதை பதிவேற்ற உங்களுக்கு அதிகாரம் இல்லை. மீறி பதிவேற்றினால் உடனடியாக ஆடியோ பைல் நீக்கப்பட்டு உங்கள் கணக்கு முடக்கப்படும்.

  5. நீங்கள் அனுப்பும் ஆடியோவின் குறைந்தபட்ச காலம் 60 வினாடிகள் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். (60 வினாடிகளுக்கு குறைவான ஆடியோ பைல் எடுத்து கொள்ளப்படாது.)

  6. விளம்பர நோக்கத்துடன் எந்த வித பிராண்டின் விவரங்களையும் சேர்க்கக்கூடாது.

  சில முக்கியமான உதவிக்குறிப்புகள்

  1. நீங்கள் அனுப்பும் ஆடியோ பின்னணி சத்தம் இல்லாமல் அமைதியான இடத்தில் பதிவுசெய்ததாக இருக்க வேண்டும். டிவி, கம்ப்யூட்டர் ஹம்மிங், காற்றாடி சத்தம் என எதுவும் இல்லாமல் நிசப்தமான இடத்தில் அதைப் பதிவுசெய்யுங்கள்.

  2. உங்கள் கதைக்கு ஏற்ற அட்டைப் படத்தை அனுப்புவது அவசியம்.

  3. பதிவுசெய்வதற்கு முன் உங்கள் ரெகார்டிங் இயந்திரத்தை சரி பார்த்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து தெளிவாகப் பேசுங்கள், அப்போதுதான் கேட்போர் உங்கள் ஆடியோவைப் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.

  ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இந்தப் போட்டி தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு support@vaarta.com-ஐ நாடவும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் போட்டியில் பங்கேற்று அட்டகாசமான பரிசுகளை வெல்லுங்கள்!

  போட்டியில் பங்கேற்க http://bit.ly/vaarta என்ற இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: