அத்தனை படத்தில் நடித்தும் கிடைக்காத புகழ் சன் டிவி சீரியல் மூலம் கிடைத்தது : மனம் திறந்த நடிகர்!

வானத்தைப்போல

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சன் டிவியில் தொடர்களில் ஒன்று தான் வானத்தைப்போல.

  • Share this:
வெள்ளித்திரை நடிகர்கள் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு பிரபலமாகிறார்களோ, அதே அளவுக்கு சின்னத்திரை நடிகர்கள் அதிலும் சீரியல் நடிகர்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றனர் . அப்போதெல்லாம் சினிமாத்துறையில் நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் பலர் சின்னத்திரை பக்கம் திரும்பி விடுகின்றனர். ஆனால், இப்போது சின்னத்திரை மூலம் பிரபலமாகி பலர் வெள்ளித்திரைக்கு பறந்து விடுகின்றனர்.

இதன் காரணமாக பல திரையுலக பிரபலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். காரணம் தொலைக்காட்சி மூலம் மக்களின் வீட்டிற்கே சென்றுவிடலாம். இருப்பினும் நிறைய கலைஞர்கள் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரைக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சன் டிவி சீரியலில் லீடிங் ரோலில் நடித்து வரும் நடிகர் இதற்கு முன்பு பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சன் டிவியில் தொடர்களில் ஒன்று தான் வானத்தைப்போல. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பட்டு வரும் வானத்தை போல சீரியல் சமீபத்தில் தான் வெற்றிகரமாக 200 எபிசோட்களை கடந்துள்ளது. இந்த வெற்றியை சீரியல் குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். அண்ணன்-தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் விதத்தில் இதன் கதைக்களம் அமைந்துள்ளதால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

இதில் வெற்றி கதாபாத்திரத்தில் திலக்கும், துளசியாக ஸ்வேதா கெல்கே, சந்தியாவாக தேப்ஜனி மோடக், கார்த்தியாக ராஜபாண்டி துரைசாமி, விஷ்வாவாக தரிஷ் ஜெயசீலன், சங்கர பாண்டியாக மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். குறிப்பாக இந்த சீரியலில் அண்ணன் சின்னராசு என்ற லீடிங் கதாபாத்திரத்தில் நடிகர் தமன் குமார் நடித்து வருகிறார்.

இந்த சீரியலின் துளசி-சின்ராசு கேரக்டர்கள் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளது என்றே சொல்லலாம். சினிமாவில் நடித்ததை விட சின்ராசு கதாபாத்திரத்தில் நடிக்கும் தமன் குமார் தற்போது அதிகம் மக்களிடம் ரீச் ஆகியுள்ளார். இவரை வெள்ளித்திரையில் பலர் பார்த்திருக்கலாம். இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரையில் முதன்முதலில் 2011ல் படித்துறை என்ற படத்தில் நடித்தார்.

Also read... சில்லுனு ஒரு காதல் சீரியலில் சிறப்பு வேடத்தில் வரும் பிரபல மிமிக்ரி மன்னர்: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் எபிசோட்!

ஆனால் அந்த படம் ரிலீஸாகவில்லை. பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் ரசிகர்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பிறகு சும்மா நச்சுனு இருக்கு, தொட்டால் தொடரும், சேது பூமி, புயலா கிளம்பி வரோம், 6 அத்தியாயம், நேத்ரா என போன்ற சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் எந்த படங்களும் இவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது கண்மணி பாப்பா, யாழி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது தெரியவில்லை. தமன்குமார் சில டெலிஃபிலிம்களிலும் நடித்துள்ளார்.

பல படங்களில் நடித்தும் வெற்றி கிடைக்காத நிலையில் இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் தயங்கிய இவர் பிறகு சன் டிவி என்றவுடன் துணிந்து நடிக்க வந்தார். இப்போது இவர் மக்களின் பாசக்கார சின்ராசு அண்ணனாகவே மாறிவிட்டார். அந்தளவுக்கு இவரின் நடிப்பிற்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது. படங்கள் மூலம் கிடைக்காத வெற்றியை இந்த சீரியல் தனக்கு பெற்றுத்தந்துள்ளதை நினைத்து தமன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: