வானம் கொட்டட்டும் ட்ரெய்லருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 • Share this:
  வானம் கொட்டட்டும் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்கச் சிவந்த வானம். இந்தப் படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்தது.

  இந்தப் படத்தை அடுத்து பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்திலும் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

  இந்நிலையில் அவர் எழுதி தயாரிக்கும் வானம் கொட்டட்டும் படமும் அதே ஸ்டைலில் உருவாகியுள்ளது. மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா, சாந்தனு, வேலையில்லா பட்டாதாரி படத்தில் நடித்த அமிதாஷ் பிரேதன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சித் ஸ்ரீராம்.

  படத்தின் பாடல்கள் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 7-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Sheik Hanifah
  First published: