கமல்ஹாசன் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் உத்தம வில்லன். இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
இவர் வாகை சூடவா, திருமணம் என்னும் நிக்காஹ், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன் இப்படி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்களுக்கு இசையமைத்து பாராட்டையும் பெற்றுள்ளார். முன்னணி நடிகரான கமல்ஹாசனுடன் பாபநாசம் திரைப்படத்திலும் இணைந்து வேலை செய்துள்ளார்.
இந்நிலையில் உத்தம வில்லன் திரைப்படத்தில் உள்ள இசை ஹிந்தி வெப் சீரிஸில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக ஜிப்ரானின் ரசிகர் ஒருவர் இவருக்கு வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார். இதை பார்த்தஜிப்ரான் ‘எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது’ என அந்த வீடியோவை பதிவிட்டு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாமல் யாருடைய சொந்த இசையையும் யாரும் பயன்படுத்த அனுமதியில்லை. இந்த செயல் ஜிப்ரான் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்துள்ளது. ஹிந்தியில் ஒளிப்பரப்பாகும் ‘Paurashpur’என்ற வெப் சீரிஸில் உத்தம வில்லன் மியூசிக் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.