ஆஸ்கர் விருது பெற்ற அனிமேஷன் இயக்குனர் ஜீன் டீச் காலமானார்!

ஜீன் டீச்சின் ரசிகர்கள் இணையதளத்தில் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆஸ்கர் விருது பெற்ற அனிமேஷன் இயக்குனர் ஜீன் டீச் காலமானார்!
அனிமேஷன் இயக்குனர் ஜீன் டீச்
  • Share this:
ஆஸ்கர் விருது பெற்ற அனிமேஷன் பட இயக்குனர் ஜீன் டீச் (GENE DEITCH) காலமானார்.

அமெரிக்காவில் புகழ்பெற்ற டாம் டெரிஃபிக் கார்ட்டூன் தொடர்களை உருவாக்கிய ஜீன் டீச், மன்ரோ (Munro) படத்திற்காக 1960 ல் ஆஸ்கர் விருதை வென்றார்.

2004 ஆம் ஆண்டில் அனிமேஷனுக்கான வாழ்நாள் பங்களிப்பிற்காக வின்சர் மெக்கே விருது ஜீன் டீச்சுக்கு வழங்கப்பட்டது. 95 வயதான ஜீன் டீச் வயது மூப்பின் காரணமாக செக் குடியரசின் பிராகா நகரில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.






தங்களது குழந்தைப் பருவத்தை கார்ட்டூன் படங்களால் நிறைவாக்கியதற்காக நன்றி தெரித்து ஜீன் டீச்சின் ரசிகர்கள் இணையதளத்தில் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

Also see...
First published: April 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading