சன் டிவியின் அழகு சீரியலில் நடிக்கும் ஊர்வசி

நடிகை ஊர்வசி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகு தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஊர்வசி நடிக்க உள்ளார்.

 • Share this:
  1977-ம் ஆண்டு மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஊர்வசி, 1983-ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்த இவர் தற்போது அம்மா கதாபாத்திரங்கள் மற்றும் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது முழு நேர சீரியல் நடிகையாகவும் நடிக்க இருக்கிறார்.

  ரேவதி, சங்கீதா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து வரும் அழகு தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ஊர்வசி. அவர் நடிக்கும் சில எபிசோட்களுக்கான படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் அதற்கான புரமோஷன் வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. தற்போது முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இயல்புநிலை திரும்பிய பின்னர் அழகு சீரியலின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

  மேலும் படிக்க: சன் டிவி சீரியலில் நடிக்கும் யாஷிகா ஆனந்த் - சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  ஏற்கெனவே இத்தொடரில் நடித்து வரும் ரேவதி ஊர்வசியின் நெருங்கிய தோழி என்பதால் இந்த சீரியலில் இருவருடைய நடிப்புக்கும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Sheik Hanifah
  First published: