• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூர்யாவின் அடுத்த படபாடல் - ப்ரோமோ வீடியோ ரிலீஸ்!

சூர்யாவின் அடுத்த படபாடல் - ப்ரோமோ வீடியோ ரிலீஸ்!

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

உறியடி 2 படத்தை விஜய்குமாரே இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சூர்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் உறியடி 2 படத்தின் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் உறியடி. இந்தப் படத்தை இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

    உறியடி 2 படத்தை விஜய்குமாரே இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா நடித்திருக்கிறார். 2018-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் படம் வெறும் 36 நாட்களிலேயே நிறைவடைந்தது.



    இந்தநிலையில் தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 'வா வா பெண்ணே' என்று தொடங்கும் இந்தப் பாடலை 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்க விஜய்குமார் மற்றும் நாகராஜி எழுத, சித்ஸ்ரீராம் மற்றும் பிரியங்கா பாடியுள்ளனர்.



    படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல் ப்ரோமோ வெளியாகியிருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மணல் கடத்தல்... ஆபாசமாக மிரட்டிய பெண் காவலர் - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: