• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 36 நாட்கள் ஒரே செட்யூலில் முடிந்த சூர்யாவின் அடுத்த படம்

36 நாட்கள் ஒரே செட்யூலில் முடிந்த சூர்யாவின் அடுத்த படம்

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் உறியடி 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் உறியடி. இந்தப் படத்தை இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் தயாராகியுள்ளது.

படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் விஜய்குமாரே இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா நடித்திருக்கிறார் . விஜய் சேதுபதியின் `96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைப்பதால் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் பாடல்களுக்கான உரிமையை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் நடந்துவந்த நிலையில் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் படம் வெறும் 36 நாட்களிலேயே தனது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனமான 2டி கூறியுள்ளது.



வீடியோ பார்க்க: சர்கார் சர்ச்சையின் மறுபக்கம்: நடந்தது கதைத் திருட்டா, மெகா ஊழலா? புதிய சர்ச்சை வெடிக்கிறதா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: