Home /News /entertainment /

சூர்யா படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்

சூர்யா படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்

சூர்யா

சூர்யா

96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பதால் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் பாடல்களுக்கான உரிமையை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

  • News18
  • Last Updated :
    உறியடி 2 படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் உறியடி. இந்தப் படத்தை விஜய்குமார் இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் தயாராகியுள்ளது.

    படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய்குமாரே இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா நடித்திருக்கிறார் . விஜய் சேதுபதியின் `96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைப்பதால் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் பாடல்களுக்கான உரிமையை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.



    இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.



    விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    ஆல் இன் ஆல் அரசியல் - வீடியோ

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Surya

    அடுத்த செய்தி