மீண்டும் வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதி - உப்பெனா படத்தின் டிரெய்லர் வெளியீடு!

'உப்பெனா' என்ற தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை புச்சிபாபு சனா என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

'உப்பெனா' என்ற தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை புச்சிபாபு சனா என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

  • Share this:
தமிழ் திரையுலகில் சிறு சிறு காதாபாத்திரங்களில் நடித்து தற்போது சிறந்த நடிகர்களில் ஒருவராக நடிகர் விஜய் சேதுபதி இருக்கிறார். இவரது வெளிப்படையான பேச்சு மற்றும் அசாதாரணமான நடிப்பு திறமையால் இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு மற்றும் வாசனங்கள் அதிகளவில் பாராட்டை பெற்றது. மாஸ்டர் படம் தெலுங்கிலும் நன்றாக ஓடியதால் விஜய் சேதுபதிக்கு அங்கும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.  

இந்நிலையில் 'உப்பெனா' என்ற தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை புச்சிபாபு சனா என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் பஞ்சா வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாகவும், கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதாநாயகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகனாவார். மேலும் தேவிஶ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். 

இந்தப் படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியானது. ட்விட்டரில் இந்த ட்ரைலரை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர், ``இந்த ட்ரைலரை வெளியிடுவதில் மகிழ்ச்சி, அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டிருந்தார். 2 நிமிடங்கள், 10 வினாடிகள் அடங்கிய இந்த ட்ரைலர் காதல் கதையை மையமாக கொண்டதாக தெரிகிறது. கதாநாயகன், கதாநாயகி இருவரும் காதலிக்கும் நிலையில், எதிர்ப்பு கிளம்பியாதல் அவர்கள் தலைமறைவாகின்றனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விஜய் சேதுபதி தனக்குரிய பாணியில் மிரட்டும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த டிரைலரில் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக வரும் காட்சிகள் மிரட்டலாக இருக்கின்றன. இந்த திரைப்படம் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பதிருப்பதால் தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். 
Published by:Ram Sankar
First published: