• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • OTT தளங்களில் நீங்கள் கண்டு ரசிக்க கூடிய சிறந்த பொழுதுபோக்கு படங்களின் பட்டியல்!

OTT தளங்களில் நீங்கள் கண்டு ரசிக்க கூடிய சிறந்த பொழுதுபோக்கு படங்களின் பட்டியல்!

படங்களின் பட்டியல்

படங்களின் பட்டியல்

உங்கள் பொழுதுபோக்கிற்காக நீங்கள் காண வேண்டிய சிறந்த தமிழ் காமெடி மற்றும் என்டர்டெயின்மென்ட் படங்களை குறித்து காண்போம்.

  • Share this:
    கொரோனா ஊரடங்கு வந்த பிறகு நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட தளங்களின் பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் வாரத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஒரு புதிய திரைப்படங்கள் OTT தளங்களில் வெளியாவது வழக்கமாகி விட்டது.

    இதனால் பொழுபோக்கிற்காக வெளியே செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள் வீட்டில் இருந்தபடியே புதிய படங்களை கண்டுகளிக்கலாம். மேலும், ஏற்கனவே ரிலீசான படங்களையும் கண்டுகளிக்கலாம். அந்த வகையில் உங்கள் பொழுதுபோக்கிற்காக நீங்கள் காண வேண்டிய சிறந்த தமிழ் காமெடி மற்றும் என்டர்டெயின்மென்ட் படங்களை குறித்து காண்போம்.

    1. தாராள பிரபு : அமேசான் பிரைம் வீடியோ

    தாராள பிரபு என்பது ஆயுஷ்மான் குர்ரானாவின் சூப்பர் ஹிட் படமான விக்கி டோனரின் தமிழ் ரீமேக் படமாகும். இந்த படம் சில வேடிக்கையான நிகழ்வுகளை கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இதில் விந்தணு தானம் கொடுக்கும் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடிகர்கள் விவேக் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் நடித்துள்ளனர். விவேக் ஒரு விசித்திரமான டாக்டர் கண்ணதாசன் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். சிறந்த நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக இது இருக்கிறது.

     



    2. வேலையில்லா பட்டதாரி 2 - அமேசான் பிரைம் வீடியோ

    2014 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரியின் தொடர்ச்சி தான் வேலையில்லா பட்டதாரி 2 அல்லது விஐபி 2 . இதில் தனுஷ், அமலா பால், விவேக், ஹிருஷிகேஷ், சரண்யா பொன்னவன்னன் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த அதிரடி-நகைச்சுவை படத்தில் கஜோல் நடித்துள்ளார்.

     



    3. பெட்ரோமாக்ஸ் - அமேசான் பிரைம் வீடியோ

    பெட்ரோமாக்ஸ் நகைசுவை கலந்த திகில் திரைப்படம் ஆகும். நான்கு நட்பு ஆவிகள் கொண்ட ஒரு வீட்டில் திரைக்கதை நகர்கிறது. வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்க ஆசைப்படுகிறார். ஆனால் அந்த இடத்தைப் பற்றி வதந்திகள் பரவி வருவதால், வீட்டில் பேய்கள் இல்லை என நிரூபிக்க நான்கு பேரை வீட்டில் தங்க வைக்க முடிவெடுக்கிறார். இந்த நான்கு பேரும் நட்பு ஆவிகளும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான எதிரியைப் கொலை செய்கின்றனர். தமன்னா, பிரேம், யோகி பாபு, ராம்தாஸ், காளி வெங்கட், சத்யான் மற்றும் டி.எஸ்.கே ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

     



     

    4. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்- நெட்ஃபிக்ஸ்

    கண்ணம் கண்ணும் கொள்ளையடித்தால் என்பது காதல், நகைச்சுவை, ட்ராமா ஆகியவற்றின் கலவையாகும். தேசிங் பெரியசாமி எழுதி இயக்கியுள்ள இதில் துல்கர் சல்மான் மற்றும் ரிது வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், மேலும் ரக்ஷன் மற்றும் நிரஞ்சனி அஹத்தியன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

     



    5. மான்ஸ்டர் - அமேசான் பிரைம் வீடியோ

    ஒரு எலியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் முழுக்க முழுக்க நகைசுவை சார்ந்த படமாக இருக்கிறது. எஸ்.ஜே சூர்யாவின் அற்புதமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது என்றே சொல்லலாம்.

     



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: