• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எம்.எல்.ஏ. சீட்டோ, கட்சி பதவியோ கேட்கவில்லை - உதயநிதி ஸ்டாலின் அதிரடி

எம்.எல்.ஏ. சீட்டோ, கட்சி பதவியோ கேட்கவில்லை - உதயநிதி ஸ்டாலின் அதிரடி

திமுக தலைவருடன் உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவருடன் உதயநிதி ஸ்டாலின்

”கட்சி தொண்டர்கள் என்மீதான அன்பால் போஸ்டர் அடிப்பதற்கு எல்லாம் ஒன்றும் செய்யமுடியாது. எல்லா போஸ்டர்களை கிழித்துக் கொண்டிருக்க முடியுமா?” என்றார் உதயநிதி ஸ்டாலின்

  • News18
  • Last Updated :
  • Share this:
திமுகவில் எம்.எல்.ஏ சீட்டோ கட்சியில் பதவியோ தான் கேட்கவில்லை என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் கண்ணே கலைமானே படத்தில் நடித்து வருகிறார். மேலும் மிஸ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது சினிமா, அரசியல் பயணம் குறித்து பேசியுள்ளார். அதில், எனது சினிமா வாழ்க்கையை மனிதன் படத்துக்கு முன், பின் என இரண்டாக பிரிக்கலாம். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்கு பின்பு காமெடி கதை அம்சமுள்ள படங்களில் நடித்து வந்தேன். ஆனால் மனிதன் படம் வெளியாகி வரவேற்பை பெற்ற பின்னர்தான் எல்லா வகையான படங்களிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமாகி இருக்க வேண்டியது. முகமூடி கதையையும் என்னிடம் தான் முதலில் சொன்னார். ஆனால் அப்போது இணைந்து நடிக்க முடியாமல் போய்விட்டது. இப்போது சேர்ந்திருக்கிறோம். மனிதன் படத்துக்கு பின்னர் தான் மிஷ்கின் படங்களில் நடிக்கும் நம்பிக்கை வந்தது.கண்ணே கலைமானே படம் விவசாயிகளின் பிரச்னைகள், நீட் தேர்வு, இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கிய கதை. இந்தப் படத்தில் நான் கமலக்கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் ஆர்கானிக் விவசாயியாக நடித்துள்ளேன். தமன்னா, பாரதி என்ற கதாபாத்திரத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரியாக நடித்துள்ளார்.ஒரு விவசாயிக்கும் வங்கி அதிகாரிக்கும் இடையிலான ஒரு மெல்லிய காதல்தான் இந்தப் படத்தின் ஒருவரி கதை. படத்தின் கிளைமாக்ஸில் கிளிசரின் உதவியின்றி அழுது நடித்துள்ளேன். அதற்கு இயக்குநர் சீனு ராமசாமிதான் காரணம்”என்று கூறினார்.மேலும் அரசியல் குறித்து பேசிய அவர், “கடந்த தேர்தலில் எனது அப்பா (மு.க.ஸ்டாலின்) கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். நான் அவரது தொகுதியான ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட போவதாக செய்திகள் வந்தன. ஆனால் அது வதந்தி என்று உறுதியானது. இப்போது மீண்டும் அதுபோன்ற வதந்தி கிளம்பியுள்ளது. ஆனால் எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. நான் தேர்தலில் நிற்பதைப் பற்றி யோசிப்பதற்கான நேரம் இது இல்லை. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. கட்சி நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பதற்கு காரணம் கட்சியின் செய்தித்தாளுக்கு மேலாளராக இருப்பதும், நடிகராக இருப்பதும் தான். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் மட்டும்தான் போராட்டங்களில் கலந்து கொள்கிறேன். கட்சியில் எம்.எல்.ஏ. சீட்டோ , பதவியோ நான் கேட்கவில்லை” என்றார்.

கட்சியின் மூத்த தலைவர்களோடு உங்களை ஒப்பிட்டு விமர்சிக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், உண்மை தெரியாமல் விமர்சிப்பவர்களை என்ன சொல்வது, ஒரு சாதாரண அடிமட்ட உறுப்பினராக இருப்பதைத் தவிர நான் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. என்மீது இருக்கும் அன்பால் கட்சித் தொண்டர்கள் போஸ்டர் அடிக்கிறார்கள். வேண்டாம் என்று பலமுறை சொல்லிவிட்டேன். போஸ்டர் அடிப்பதற்கு எல்லாம் ஒன்றும் செய்யமுடியாது. எல்லா போஸ்டர்களை கிழித்துக் கொண்டிருக்க முடியுமா? ” என்று கூறினார்.

கள்ளக்காதலனை வைத்து கணவரை கொன்ற மனைவி - வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: