எஸ்.ஏ. சந்திரசேகர் கட்சியுடன் கூட்டணியா? - உதயநிதி ஸ்டாலின் பதில்

எஸ்.ஏ. சந்திரசேகர் கட்சியுடன் கூட்டணியா? - உதயநிதி ஸ்டாலின் பதில்

எஸ்.ஏ.சந்திரசேகர் | உதயநிதி ஸ்டாலின்

நடிகர் விஜயின் தந்தை ஆரம்பித்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேசத் தொடங்கிவிட்டன. அரசியல் பரபரப்பு ஆரம்பமாவதற்குள் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்து அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

  ஆனால் அதற்குள் நடிகர் விஜய், தன் தந்தை ஆரம்பித்திருக்கும் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்றும், ரசிகர்கள் அதில் இணைந்து பணியாற்ற வேண்டாம் என்றும் அறிக்கை வெளியிட்டு அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

  விஜய்யின் அறிக்கையை அடுத்து கட்சியின் பொருளாளராக பதிவு செய்யப்பட்டிருந்த விஜய்யின் தாயார் அந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதேவேளையில் தேர்தல் அரசியலுக்காக கட்சி பதிவு செய்யப்படவில்லை என்றும் 25 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருக்கும் நிர்வாகிகளை ஊக்கப்படுத்தவும், அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கவும் கட்சி ஆரம்பித்திருப்பதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் நேர்காணலில் விளக்கமளித்திருந்தார்.  இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பித்திருக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

  அதற்கு பதிலளித்த அவர், “விஜய்யின் தந்தையிடம் தான் கேட்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதி குறித்து தலைமை தான் முடிவு செய்யும்” என்று கூறினார்.
  Published by:Sheik Hanifah
  First published: