• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாஜகவில் இணையத் தயார் - உதயநிதிக்கு ஐடியா கொடுத்த காயத்ரி ரகுராம்

பாஜகவில் இணையத் தயார் - உதயநிதிக்கு ஐடியா கொடுத்த காயத்ரி ரகுராம்

இந்தவிவகாரத்தில் உதயநிதிக்கு யோசனை சொன்ன காயத்ரி ரகுராம்,  “இந்த மாதிரியான ஆட்களுக்கு பதிலளிக்காதீர்கள். இவர்கள் விளம்பரத்துக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்” என்று கூறியுள்ளார்

  • News18
  • Last Updated :
  • Share this:
    நான் திமுகவின் அறங்காவலர் என்பதை உங்களால் நிரூபிக்க முடிந்தால் நான் பாஜகவில் இணையத் தயார் என்று உதயநிதி ஸ்டாலின் நெட்டிசன் ஒருவருக்கு பதிலளித்துள்ளார்.

    தீவிர அரசியலில் ஈடுபடாமல் பிரியங்கா காந்தியை அவரது சகோதரரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். பிரியங்கா காந்தியின் நியமனத்தை குடும்ப அரசியல் என்று பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

    சமூகவலைதளங்களில் இதுதொடர்பாக நடைபெற்று வரும் விவாதத்தில், பாஜக தலைவர்களின் மகன் என்னென்ன பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்ற புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, தமிழக பாஜகவில் இருக்கும் சுரேஷ் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோரைக் குறிப்பிட்டு 'இதற்கு என்ன சொல்கிறீர்கள்?' என்று திருமாறன் என்ற நெட்டிசன் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்துள்ள பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சூர்யா, “இந்தப் பட்டியலில் வாரிசு எங்கேயும் இல்லை. இவர்கள் அனைவருமே கட்சியின் தலைவர்கள் அல்ல. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள். கருணாநிதி மற்றும் சோனியா காந்தி குடும்பத்தினர் தான் கட்சியையே தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது” என்று கூறியுள்ளார்.



    இந்த பதிலை வாரிசு அரசியலுக்கு புதுவிளக்கமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து தனது பதில் பதிவில், "பல கோடிகளை வைத்திருக்கும் திமுகவின் அறக்கட்டளைகளுக்கு அறங்காவலராக உதயநிதி நியமிக்கப்பட்டத்தை நியாயப்படுத்துபவர்களுக்கு இது புதிதாகத் தான் இருக்கும். அடுத்து இன்பநிதியின் நியமனத்தையும் ஞாயப்படுத்தத் தயாராகுங்கள். அப்போதும் அதை டாக்டர் தமிழிசை அல்லது நிர்மலா சீதாராமனுடன் ஒப்பிடலாம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார்.



    சூர்யாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், “நான் திமுகவின் அறங்காவலராக இருப்பதை உங்களால் நிரூபிக்க முடிந்தால், நான் பாஜகவில் இணையும் அந்தக் கொடுமையான தண்டனை ஏற்கத் தயார்.” என்று கூறியுள்ளார்.



    இந்த விவகாரத்தில் உதயநிதிக்கு யோசனை சொன்ன காயத்ரி ரகுராம்,  “இந்த மாதிரியான ஆட்களுக்கு பதிலளிக்காதீர்கள். இவர்கள் விளம்பரத்துக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ட்விட்டரில் இவர்களை நிறையபேர் பின்பற்ற வேண்டும் என்பதற்காக பணம் செலவழித்திருப்பார்கள். இவர்களைப் போன்றவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க எந்த எல்லைக்கும்  செல்வார்கள்” என்று கூறியுள்ளார்.

    அஜித்... அரசியல்... சர்ச்சைகள் - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: