• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின்

பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். திரைத்துறையில் தயாரிப்பாளராக அறிமுகமான இவர், தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக அரசியல் மேடைகளில் தென்படும் இவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை இவரது 41-வது பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று அவரது ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலினின் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கருணாநிதி மறைவாலும், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீளாத் துயரத்தில் இருப்பதால், இந்த வருடம் பிறந்தநாள் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நற்பணிகளை செய்யும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



    உதயநிதி ஸ்டாலின் இந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார்.

    மிதாலி ராஜை போல் நானும் ஓரங்கட்டப்பட்டேன் - கங்குலி பேச்சு - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: