முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பூஜை தினங்களை முன்னிட்டு திரையரங்கில் வெளியான அரண்மனை படம்!

பூஜை தினங்களை முன்னிட்டு திரையரங்கில் வெளியான அரண்மனை படம்!

வழக்கமான அரண்மனை திரைப்படங்களை போல திகில் நிறைந்த ஒரு காமெடி திரைப்படமாக இந்த திரைப்படம் வெளிவந்துள்ளது.

வழக்கமான அரண்மனை திரைப்படங்களை போல திகில் நிறைந்த ஒரு காமெடி திரைப்படமாக இந்த திரைப்படம் வெளிவந்துள்ளது.

வழக்கமான அரண்மனை திரைப்படங்களை போல திகில் நிறைந்த ஒரு காமெடி திரைப்படமாக இந்த திரைப்படம் வெளிவந்துள்ளது.

 • Last Updated :

  பூஜை தினங்களை முன்னிட்டு அரண்மனை திரைப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ள நிலையில் மேலும் இரண்டு தமிழ் திரைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

  பூஜை விடுமுறை தினங்களை குறிவைத்து டாக்டர் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் ஆயுதபூஜை தினமான இன்று சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை திரைப்படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகியுள்ளது. வழக்கமான அரண்மனை திரைப்படங்களை போல திகில் நிறைந்த ஒரு காமெடி திரைப்படமாக இந்த திரைப்படம் வெளிவந்துள்ளது.

  இதேபோல சசிகுமார் சமுத்திரகனி ஜோதிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே திரைப்படம் அமேசான் வலைதளத்தில் வெளியாகி உள்ளது கிராமிய வாழ்க்கை முறை திருவிழாக்கள் உறவுகளுக்கு இடையே உள்ள நெருக்கம் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

  Also read... அண்ணாத்த தெலுங்கு திரையரங்கு உரிமை சோல்ட் அவுட்...!

  மேலும் ஜீ 5 வலைதளத்தில் சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள வினோதய சித்தம் என்ற ஃபேண்டசி திரைப்படமும் நேரடி இணைய திரைப்படமாக வெளிவந்துள்ளது. இவைதவிர ஹாலிவுட் திரைப்படமான வெனோம் திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் இந்த விடுமுறை தினங்களை குறிவைத்து வெளியாகியுள்ளதால் இந்த வார இறுதி வரை ரசிகர்களுக்கு திரைவிருந்து தயாராக உள்ளது

  First published: