பிக்பாஸ் ரம்யா பாண்டியனை ஆதரிக்கும் ட்விட்டர் வாசிகள்..ஏன் தெரியுமா?

பிக்பாஸ் ரம்யா பாண்டியனை ஆதரிக்கும் ட்விட்டர் வாசிகள்..ஏன் தெரியுமா?

ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் வீட்டில் ரம்யா பாண்டியன் இருக்க வேண்டும் என ட்விட்டர் வாசிகள் ரம்யா ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 • Share this:
  பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4-ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. பின்பு வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா மற்றும் சுசித்ரா வீட்டினுள் சென்றனர்.இரண்டு வாரங்களிலே சுசித்ரா வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.பின்பு தொடர்ந்து வேல்முருகன்,சுரேஷ், சனம் உள்ளிட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

  70 நாட்களை கடந்த நிலையில் டபுள் எவிக்‌ஷனில் முதல் நபராக ஜித்தன் ரமேஷும்,இரண்டாவது நபராக அறந்தாங்கி நிஷாவும் வெளியேற்றப்பட்டனர்.அதையடுத்து அர்ச்சனா வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் 84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த அனிதா, 10-வது போட்டியாளராக கடந்த வாரம் வெளியேறினார்.

  தற்போது பிக்பாஸ் வீட்டில் பிரீஸ் டாஸ்க் நடைப்பெற்று வருகிறது.இந்த டாஸ்க்கில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டினுள் வந்து போட்டியாளர்களை சந்திப்பார்கள்.அந்த வகையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா ஷிவானியை கேள்விகளால் வெளுத்து வாங்கிவிட்டு சென்றார்.இதனால் ஷிவானியின் அம்மாவை பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருக்கலாம் என மீம் கிரியேட்டர்ஸ்கள் கூறி வந்தனர்.

  இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு ரியோவின் மனைவி ஸ்ருதி மற்றும் ரம்யாவின் அம்மா, அண்ணன் ஆகியோர் வருகிறார்கள்.இன்று வெளியான ப்ரோமோவில் ரம்யாவின் அண்ணன் ரம்யாவிடம் ‘நீ இந்த வாரம் எவிக்‌ஷன் ஆகி வெளியே வந்தால் அதற்கு காரணம் நீ இல்லை என்று கூற, அதற்கு ரம்யா பாண்டியன் சிரித்துக்கொண்டே வெளியே வர வாய்ப்பு இருக்கா ’ என்று கேட்கிறார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியனுக்கு ட்விட்டரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

   

  தான் வெளியே போவதை அவர் கேட்டுக்கொண்டும் சிரித்துக்கொண்டே உள்ளார்.அவர் நிச்சயம் வீட்டில் இருக்க வேண்டும் என ரம்யா ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.அதோடு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்ற பாத்திமா பாபு ரம்யாவை ஏஞ்சல் எனக் குறிப்பிட்டு ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: