Twitter Trending : தலயா..தளபதியா..குறுக்க இந்த தனுஷ் வந்தா? - ட்விட்டரில் கொடி பிடிக்கும் ரசிகர்கள்!

ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் Happy Doctors day ,Karnan , WhistlePodu , dhanush , msdhoni , thalaivi ஆகிய ஹேஷ்டேக்குகள் இடம் பிடித்துள்ளது.

  • Share this:
    இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் அதிகம் பகிரப்படும் ஹேஷ்டேக் Happy Doctors day . பலரும் இந்த டேகில் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

    கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக இடைவிடாமல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும், கொரோனா தொற்றாளர்களுக்கு சலிக்காமல் சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள். கொரோனா வார்டுகளில் பணிபுரிவதால் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்திக் கொள்ளும் மருத்துவர்கள், தங்கள் குடும்பங்களை கூட பல மாதங்கள் பார்க்காமல் இருந்து வருகின்றனர்.



    நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது தொற்று ஏற்பட்டு பல மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலையில் தமிழ்நாட்டில் 51 மருத்துவர்கள் இறந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.











    சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த வந்த மூத்த மருத்துவர் சைமன் கடந்த ஆண்டு தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோன்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணி புரிந்த, பல மருத்துவர்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே, அவர்களின் பணிகளை புரிந்து கொண்டு பொதுமக்கள், கொரோனாவை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் என, உயிரிழந்த மருத்துவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



    உயிர்பறிக்கும் நோயாக அறியப்படும் கொரோனாவுக்கு அஞ்சாமல், இரவு பகலென சேவை செய்து பல உயிர்களை காப்பாற்றும் மருத்துவர்களுக்கு, தேசிய மருத்துவர்கள் தினத்தில் அனைவர் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    #Karnan ஹேஷ்டேக் அடுத்த இடத்தில் ட்ரெண்டாகி உள்ளது.



    தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த 18 ஆம் தேதி ஜகமே தந்திரம் நேரடியாக வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதல்முறையாக தனுஷ் நடித்திருக்கும் படம் என்பதால் ஜகமே தந்திரம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ஜகமே தந்திரம் வெளியானது முதல் நெட்பிளிக்ஸ் இந்தியாவில் அதிகம் பேர் பார்த்த தினசரி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.அஜித்,விஜய் பிறந்த நாள் முடிந்த நிலையில் தற்போது தனுஷ் பிறந்த நாள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





    கர்ணன் படத்தை முடித்த தனுஷ், யுஎஸ் சென்று தி க்ரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்தார். அவர் இன்னும் சென்னை திரும்பவில்லை. இதற்கு இடையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.







    இப்படி படத்தில் படு பிசியாக இருக்கும் தனுஷுக்கு அவரது ரசிகர்கள் பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். ஜூலை 28ம் தேதி வரவுள்ள அவரது பிறந்த நாளுக்கு இப்போதே #Karnan ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.





    ட்விட்டரில் இன்றைய தினம் ட்ரெண்டயுள்ள அடுத்த ஹேஷ்டேக் #WhistlePodu.



    அஜித் பிறந்த நாள் முடிந்தது. விஜய் பிறந்த நாளும் முடிந்தது. அடுத்ததாக தோனி ரசிகர்கள் அவரது பிறந்த தினத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்த மாதம்7ம் தேதி இவரது பிறந்த தினம் என்பதால் தோனியின் ரசிகர்கள் இவரது பிறந்த நாளை தற்போது இணையத்தில் கொண்டாடத் தொடங்கி விட்டனர்.













    ட்விட்டரில் இன்றைய தினம் ட்ரெண்டயுள்ள அடுத்த ஹேஷ்டேக் #Thalaivi.



    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக்கியுள்ளார் இயக்குநர் ஏ.எல்.விஜய். கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனைவரும் பார்க்கத் தகுந்த யூ சான்றிதழை வழங்கியுள்ளது தணிக்கைக்குழு.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பலரும் திரைப்படமாக்க முயன்றனர். கௌதம் வெப் சீரிஸாக எடுத்தார்.







    ஆனால், ஏ.எல்.விஜய்தான் முதல் முதலில் அதனை பிரமாண்டமாக சாதித்திருக்கிறார். தலைவி தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. அரவிந்த்சாமி இதில் எம்ஜிஆராக நடித்துள்ளார்.தமிழ் பதிப்புக்கு மதன் கார்க்கியும், இந்திக்கு ரஜத் அரோராவும் வசனம் எழுதியுள்ளனர். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங், பிருந்தா பிரசாத் ஆகியோர் தலைவியை தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.





    சுமார் 100 கோடிகள் படத்துக்கு செலவிடப்பட்டுள்ளதால், திரையரங்கில் வெளியிட்டால் மட்டுமே போட்ட பணத்தை எடுக்க முடியும் என்ற நிலையில் தயாரிப்பாளர்கள் திரையரங்கில் படத்தை வெளியிடுவது என்பதில் உறுதியாக இருந்தனர்.

    தற்போது கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் படம் சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அனைவரும் பார்க்கத் தகுந்த யூ சான்றிதழை சென்சார் போர்ட் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்டில் படத்தை வெளியிடும் வேலையை முடுக்கிவிட்டுள்ளனர்.
    Published by:Sankaravadivoo G
    First published: