பிரபல சீரியல் நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை

மாதிரிப் படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  பிரபல டிவி சீரியல் நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தெலுங்கு சீரியல்களில் நடித்து வருபவர் மது பிரகாஷ். சீரியல்கள் மட்டுமின்றி ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2015 -ம் ஆண்டு பாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பாரதி தனது கணவரின் குடும்பத்தாருடன் பஞ்சவடி காலனியில் வசித்து வருகிறார்.

  மதுபிரகாஷ் ஷூட்டிங் காரணமாக தினமும் இரவு வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார். கணவரின் இந்த நடவடிக்கை பிடிக்காததால் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

  நேற்று காலை 10 மணிக்கு தனது உடற்பயிற்சியை முடித்துவிட்டு படப்பிடிப்பு செல்வதாக கூறிச்சென்ற மது பிரகாஷிடம், இன்று சீக்கிரம் வீட்டுக்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று பாரதி மிரட்டியுள்ளார்.

  இந்நிலையில் இரவு 7.30 மணிக்கு வீடு திரும்பிய மதுபிரகாஷுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கை அறையிலிருக்கும் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் பாரதி. அதிர்ச்சியடைந்த மதுபிரகாஷ் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, பாரதியின் உடல் உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

  படிக்க: பிக்பாஸ் சரவணன் என்னிடம் போனில் அழுதார் - பரணி ஓபன் டாக்

  வீடியோ பார்க்க: வீடியோ பார்க்க: 90-களில் வந்த சினிமா படங்கள் ஒரு பார்வை

  Published by:Sheik Hanifah
  First published: