சாலை விபத்து ஒன்றில் தொலைக்காட்சி நடிகைகள் இருவர் மரணமடைந்துள்ளனர்.
தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பார்கவி (20), அனுஷா (21) ஆகிய இரு நடிகைகள் தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் சூட்டிங் முடித்துவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளனர்.
ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே அதிவேகத்தில் லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரியின் மீது மோதாமல் இருக்க கார் டிரைவர் காரை திருப்பிய போது அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் நடிகைகள் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர். கார் ஓட்டுநர் சாக்ரிவீர் மற்றும் உடன் பயணித்த வினய் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வாக்குப்பதிவு
மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த நடிகர் விஜய் - வீடியோ
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.