புத்தக கண்காட்சியில் திருடிய டிவி நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ரூ. 75ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சர்வதேச புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பிரபல டிவி நடிகை ரூபா தத்தா நேற்று முன்தினம் வந்துள்ளார். புத்தக திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, பணப் பை (Money Purse)ஒன்றை குப்பை தொட்டியில் ரூபா வீசியுள்ளார். இதை யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த காவலர் இதனைப் பார்த்துவிட்டார்.
நடிகையின் இந்த செயல் காவலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, நடிகையை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக ரூபா தத்தா பதில் அளித்துள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர், புத்தக திருவிழாவில் பணப் பையை திருடியது தெரியவந்தது. அந்த வகையில் மொத்தம் 75 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க -
காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் - காரியக் கமிட்டி கூட்டத்தில் முடிவு
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், 'கவனத்தை திசை திருப்பி ரூபா திருடி வந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் சிலபேர் இந்த திருட்டில் தொடர்புடையவராக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்' என்றார். டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ள நடிகை ரூபா தத்தா, பிரபல இயக்குனர் அனுராக் கஷ்யப் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். இந்நிலையில் அவர் திருட்டு வழக்கில் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.