"மைனா என் இதயத்தில் இருக்கிறாள்.." கணவர் கொடுத்த ஷாக் சர்ப்ரைஸ்.. வைரலாகும் போட்டோஸ்!

மைனா நந்தினி

சினிமாவுக்கு பிரேக் விட்டிருந்த மைனா சில காலம் கழித்து மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

  • Share this:
விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி எனும் தொடரில் மைனா கதராபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் நந்தினி. அதிலும் இவரது இயற்பெயரை விட மைனா என்ற பெயர் தான் மக்கள் மனதில் பதிந்துள்ளது. அதன் காரணமாகவே இவர் தனது பெயருடன் மைனா என்பதையும் சேர்த்துக்கொண்டார். இவர் சமீபத்தில் சின்னத்திரை நடிகர் யோகேஸ்வரம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய ஆண்குழந்தையும் பிறந்தது.

இருவரும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், கணவர் யோகேஷ்வரம் மைனாவுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதனை ரசிகர்களுக்கு வெளிப்படுத்த ஷூட்டிங் செட்டில் இருவரும் ஒன்றாக நின்று செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை மைனா நந்தினி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் என்ன சர்ப்ரைஸ் என்று தானே யோசிக்கிறீர்கள், மனைவி நந்தினியின் மீதுள்ள காதலை வெளிப்படுத்த நடிகர் யோகேஷ் தனது நெஞ்சில் மனைவியின் முகத்தை பச்சை குத்தியுள்ளார்.

https://www.instagram.com/p/CSqkyJ4JWPG/?utm_source=ig_embed&ig_rid=08c8f90d-85ed-4d87-a043-4f659d5c57fd

யோகேஷ்வரனின் இந்த செயல் நந்தினிக்கு ஷாக்கிங் சர்பிரைஸாக இருந்தது. இதுகுறித்து நந்தினி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தாவது,
"நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்காத சர்ப்ரைஸ். பாப்பா @iam_yogeshwaram அன்கண்டீஷனல் லவ் எப்போதும் உங்களுடன். நன்றி சொல்லக்கூடாது ஆனால் சொல்லணும்னு தோணுது நன்றி பாப்பா. நமக்கு ஒரு பொண்ணு இருந்தா உன்ன மாதிரி ஒரு கணவன் அவளுக்கு அமையணும்னு கடவுல வேண்டிக்கிறேன். ” என்று அன்பு மழை பொழிந்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் பிரபல நடிகரின் பேரன் என்பது தெரிய வந்தது. சிவாஜி ஆகியோருடன் எல்லாம் நடித்த பழம்பெறும் நடிகர் ராமதாஸ் அவர்களின் பேரன் தான் யோகேஸ்வரன். சின்னத்திரையில் பிரபலமாவதற்கு முன்பே நடிகை மைனா நந்தினி வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஜிம் நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்த நந்தினி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து இருந்தார்.

ஏதோ சில சிக்கல்கள் காரணமாக கணவர் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, சினிமாவுக்கு பிரேக் விட்டிருந்த மைனா சில காலம் கழித்து மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். சிவகார்த்திகேயன் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்திலும் நடித்தார். இதையடுத்து, நடிகர் யோகேஸ்வரனை காதலித்து திருமணம்செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

 
Published by:Ramprasath H
First published: