Home » News » Entertainment » TV ACTRESS ACCUSES BOLLYWOOD CASTING DIRECTOR AYUSH TIWARI OF RAPE MSB

திருமணம் செய்வதாகக் கூறி 2 வருடம் பாலியல் வன்கொடுமை - இயக்குநர் மீது டிவி நடிகை புகார்

திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக டிவி நடிகை புகார் அளித்ததை அடுத்து காஸ்டிங் இயக்குநர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருமணம் செய்வதாகக் கூறி 2 வருடம் பாலியல் வன்கொடுமை - இயக்குநர் மீது டிவி நடிகை புகார்
காஸ்டிங் இயக்குநர் ஆயுஷ் திவாரி
  • Share this:
மும்பையைச் சேர்ந்த டிவி நடிகை ஒருவர் வெர்சோவா போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், காஸ்டிங் இயக்குநர் ஆயுஷ் திவாரி தன்னை திருமணம் செய்வதாகக் கூறி கடந்த இரண்டு வருடங்களில் பலமுறை தன்னிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும் தற்போது திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் டிவி நடிகை அளித்த புகாரில் பாலிவுட் படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி ஆயுஷ் திவாரி தன்னிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், இதனால் கடந்த ஜூலை மாதத்தில் தான் கர்ப்பம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

கர்ப்பத்துக்கு தான் காரணமில்லை என்று மறுத்த ஆயுஷ் திவாரி தனது நடத்தை குறித்து தவறாக கேள்வி எழுப்பியதாகவும், அக்டோபர் மாதத்தில் திருமணம் குறித்து தான் கேள்வி எழுப்பிய போது அவரது நண்பர்கள் மத்தியில் தன்னை அசிங்கப்படுத்தி திருமணத்துக்கு மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி டிவி நடிகை புகாரளித்ததை அடுத்து காஸ்டிங் இயக்குநர் ஆயுஷ் திவாரி மீது காவல்துறையினர் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க: அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸி: சிம்புவுக்கு தாய் அளித்த அன்புப் பரிசு

இதையடுத்து தான் போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கக் கோரி ஆயுஷ் திவாரி தரப்பில் தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் டிவி நடிகை தெரிவித்துள்ளார். காஸ்டிங் இயக்குநர் மீது டிவி நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருப்பது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: December 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading