Home /News /entertainment /

கொரோனா தொற்றுக்கு பலியான டிவி சீரியல் நடிகை

கொரோனா தொற்றுக்கு பலியான டிவி சீரியல் நடிகை

டிவி நடிகை திவ்யா

டிவி நடிகை திவ்யா

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த டிவி நடிகை திவ்யா பட்னாகர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 34.

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்த கொரோனா தொற்று இன்னும் குறைந்தபாடில்லை. இந்தியாவில் இதுவரை 96 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதில் 91 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு தடுப்பூசி வரும் வரை முக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்களும், அரசும் வலியுறுத்தி வருகிறது.

முன்கள பணியாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பு மக்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலரே உயிரழக்க நேரிடுகிறது. சமீபத்தில் லேசான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு நாட்டையே உலுக்கியது.

இந்நிலையில் இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை திவ்யா பட்னாகர் கடந்த நவம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சக கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.



 




View this post on Instagram





 

A post shared by Shilpa Shirodkar (@shilpashirodkar73)






கடந்த நவம்பர் 29-ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தான் விரைவில் குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தியுங்கள் என்று திவ்யா பட்னாகர் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி